மாருதி ஜிப்ஸிதான் வேண்டும் என இந்திய ராணுவம் அடம்பிடிப்பது ஏன் ?

நவீன எஸ்யூவி மாடல்கள் வந்துவிட்டாலும்கூட மாருதி ஜிப்ஸி எஸ்யூவியை நம் நாட்டு ராணுவம் அதிகம் விரும்பி பயன்படுத்துகிறது. அதற்கான தொழில்நுட்ப ரீதியிலான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வில் இடம்பெறாத மாடல் மாருதி ஜிப்ஸி. ஆனால், இந்திய ராணுவத்தினர் இந்த எஸ்யூவியை திரும்ப திரும்ப ஆர்டர் செய்து பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மஹிந்திரா, டாடா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த எஸ்யூவி மாடல்களை காட்டி தூண்டில் போட்டாலும், அவை நம் நாட்டு ராணுவத்தினரை கவரவில்லை. கடந்த பல தசாப்தங்களாக மாருதி ஜிப்ஸி எஸ்யூவியை பயன்படுத்தினாலும், தொடர்ந்து மாருதி ஜிப்ஸிதான் வேண்டும் என்று அவர்கள் விரும்புவதற்கு தொழில்நுட்ப ரீதியில் பல காரணங்கள் உள்ளன.

01. இலகு எடை

மாருதி ஜிப்ஸி வெறும் 765 கிலோ எடை கொண்டது. மேலும், ராணுவத்தின் விதிகளின்படி, 500 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்ட வகையிலும் வருகிறது. படகு, ஹெலிகாப்டர், விமானங்கள் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவானது.

02. கொண்டு செல்வது எளிது

அதாவது, போர் முனைகளுக்கு இந்த எஸ்யூவியை எளிதாக கொண்டு செல்ல முடியும். படகு மூலமாகவோ அல்லது ஹெலிகாப்டரில் கயிறு கட்டியும் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு சென்று இறக்க முடியும். மஹிந்திரா தார், பொலிரோ போன்ற எஸ்யூவிகளின் எடையில் பாதி எடையை கொண்ட ஜிப்ஸிதான் இதற்கு சாய்ஸ்.

03. கழற்றி மாட்டலாம்...

ராணுவ சாகச நிகழ்ச்சிகளில் இந்த காட்சியை சிலர் பார்த்திருக்கக்கூடும். ஆம், மாருதி ஜிப்ஸியை இரண்டே நிமிடங்களில் பாடி தனியாக, எஞ்சின் தனியாக, சேஸி தனியாக, ஆக்சில் தனியாக என பார்ட் பார்ட்டாக கழற்ற முடியும். அடுத்த இரண்டு நிமிடங்களில் ஒன்று கோர்த்துவிட முடியும். அத்துடன், குளோப்மாஸ்டர் உள்ளிட்ட ராணுவ சரக்கு விமானங்களில் இதுபோன்று பல ஜிப்ஸி எஸ்யூவிகளை வைத்து போர் முனைப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும்.

04. ஆஃப்ரோடு பயன்பாடு

மணல் பொதிந்த பாலைவனமாகட்டும், கரடுமுரடான மலைச் சாலைகளாட்டும் அல்லது சாதாரண தார் சாலையாகட்டும் மாருதி ஜிப்ஸி எளிதாக செல்லும். மேலும், 45 டிகிரி கோண சரிவான பாதைகளில் கூட ஏறும் திறன் பெற்றது. மற்ற எஸ்யூவிகள் இந்த சாகசத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

05. ஆயுதங்கள்

போர் சமயங்களில் எந்திர துப்பாக்கிகளை இந்த எஸ்யூவியில் பொருத்தி, எதிரிகளை தாக்க முடியும். அத்துடன், தாழ்வாக பறக்கும் எதிரி நாட்டு ஹெலிகாப்டர், விமானங்களைகூட சுட்டு வீழ்த்துவதற்கான வாகனமாக மாறிவிடும்.

06. பன்முக பயன்பாடு

பின்புறத்தில் பக்கவாட்டு இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. இதனால், ஆயுதங்கள், வெடிபொருட்களையும், ராணுவ துருப்புகளையும் எளிதாக ஏற்றிச் செல்ல முடியும். இருக்கைகளை மடக்கிவிட்டு, கூடுதல் பொருட்களை எளிதாக ஏற்றி, இறக்க முடியும்.

07. 4 வீல் டிரைவ் சிஸ்டம்

மாருதி ஜிப்ஸி எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதனால், ஒரு சக்கரம் சிக்கிக் கொண்டாலும் பிற சக்கரங்களுக்கு, எஞ்சின் பவர் செலுத்தப்படுவதால் முண்டியடித்து, அந்த இடத்தை கடந்துவிடும். இந்த எஸ்யூவியில் 1,298சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 80 பிஎச்பி பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேலும், விரைவாக செல்லும் திறன் கொண்டது.

09. அப்படியா...!

மற்ற எஸ்யூவிகள் அனைத்தும் டீசலில் இயங்குபவை. ஆனால், மாருதி ஜிப்ஸியில் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதனால், ஒரு பெரிய சாதமான விஷயம் உள்ளது. அதாவது, இமயமலைப் பகுதிகளில் குளிர்காலங்களில் வெப்ப நிலை உறைநிலைக்கு கீழே சென்றுவிடும். அப்போது, அடர்த்தி அதிகம் கொண்ட டீசல் எரிநிலையை எட்ட இயலாமல், எஞ்சின்கள் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை ஏற்படும். ஆனால், ஜிப்ஸி பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளதால், எளிதில் ஸ்டார்ட் ஆகும்.

08. சஸ்பென்ஷன்

லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டிருப்பதால், மிக வலுவானதாக இருக்கிறது. அதேநேரத்தில், இது சொகுசான பயணத்தை வழங்காது . இதுவே சாதாரண வாடிக்கையாளர்களை கவரவில்லை. ஜிப்ஸியை விரும்பி வாங்கும் கார் பிரியர்கள்கூட இதன் சஸ்பென்ஷனில் மாறுதல்கள் செய்வதை முதல் வேலையாக செய்வது வழக்கம்.

10. டர்னிங் ரேடியஸ்

சக்கரங்களுக்கு இடையிலான இடைவெளி மிக குறைவானது மாருதி ஜிப்ஸி. இதனால், குறுகலான சாலைகளில் கூட எளிதாக செலுத்தவும், திருப்பமும் முடியும். சில நேரங்களில் மலைப்பாங்கான இடங்களில் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பாதி சாலை மட்டுமே இருக்கும் அல்லது பாதி சாலை சரிந்து விடும். அந்த வேளையில் பெரிய வாகனங்கள் செல்ல முடியாது. ஆனால், மாருதி ஜிப்ஸி கடந்து விடும்.

11. கிரவுண்ட் கிளியரன்ஸ்

மாருதி ஜிப்ஸி 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. எஸ்யூவி மாடல்களிலையே அதிக தரை இடைவெளி கொண்ட மாடல்களில் கொண்ட மாடல்களில் இதுவும் ஒன்று. எனவே, மிக கரடுமுரடான பாதைகளில் கூட எளிதாக செலுத்த முடியும்.

12. வழுக்கி செல்லாத திறன்

இமயமலைப் பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு பனி மூடிய சாலைகளில் கூட மாருதி ஜிப்ஸி எளிதாக செல்லும். மேலும், 30 டிகிரி சாய்வான சாலைகளில் கூட வழுக்காமல் ஏறும் திறன் கொண்டது. இதுவும் மிக முக்கியமானது.

13. நீடித்த உழைப்பு

மாருதி ஜிப்ஸி நீடித்த உழைப்பை வழங்கக்கூடியது. ராணுவத்தில் 1,20,000 கிமீ தூரம் வரை பயன்படுத்தப்படுகிறது. அதுவரை, மிக வலுவான கட்டமைப்புடன் செயலாற்றுகிறது.

14. விலை

இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட இந்த எஸ்யூவி மிக குறைவான விலை கொண்டது. எனவேதான், பல புதிய எஸ்யூவி மாடல்கள் வலிய வந்து கேட்டாலும், மாருதி ஜிப்ஸியை நம் நாட்டு ராணுவத்தினர் விடுவதில்லை.

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Why Indian Army Only Use Maruti Gypsy?. Here are some interesting reasons. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X