ஜிம்பாப்வே போலீஸ் பைக்கை 'தல' தோனி இரவல் வாங்கி ஓட்டியதன் காரணம்?

By Saravana Rajan

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிய தெம்புடன் 20 ஓவர் போட்டியை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியதைவிட, இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி, அந்நாட்டு போலீஸ் பைக் ஒன்றை இரவல் வாங்கி ஓட்டி பார்த்தது பெரும் செய்தியாக பேசப்பட்டது.

கிரிக்கெட்டை போன்றே, கார் மற்றும் பைக்குகள் மீது அதீத பிரியம் வைத்திருக்கும் தோனி, போலீஸ் பைக் என்று தெரிந்தும், அதனை இரவல் வாங்கி ஓட்டியது ஏன் என்பது பலருக்கு ஆச்சரியமான விஷயமாகவே இருந்தது. அதற்கான காரணத்தை ஸ்லைடரில் காணலாம்.

தோனியின் ஆர்வம்

தோனியின் ஆர்வம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான், அந்த போலீஸ் பைக்கை இரவல் வாங்கி மைதானத்திலேயே ஓட்டி மகிழ்ந்தார் தோனி. அதனை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

உலகின் மிகவும் காஸ்ட்லியான பைக்காகுகளில்எ ஒன்றான கான்படரேட் 132 ஹெல்கேட், ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய், யமஹா தண்டர்கேட், ராயல் என்ஃபீல்டு மஷிமோ, டுகாட்டி 1098, யமஹா ஆர்டி350 என கணக்கு வழக்கு இல்லாமல், தோனியின் பைக் கராஜ் நிரம்பி வழிகிறது. ஆனால், அவர் ஏன் இரவல் பைக் வாங்கி ஓட்டினார என்பது பலருக்கு ஆச்சரியம் தந்தது.

ஓட்டிய பைக் மாடல்

ஓட்டிய பைக் மாடல்

தோனி இரவல் வாங்கி ஓட்டி மகிழ்ந்த போலீஸ் பைக் மாடல் கவாஸாகி கான்கர்ஸ் 14 ஏபிஎஸ் என்பதாகும். இது க்ரூஸர் ஸ்போர்ட்ஸ் பைக் வகையை சார்ந்தது. இந்திய மதிப்பில் ரூ.10.50 லட்சம் மதிப்பு கொண்டது.

 பைக்கின் சிறப்பம்சங்கள்

பைக்கின் சிறப்பம்சங்கள்

காவல் துறை பயன்பாடுகளுக்கு ஏற்ற பல சிறப்பம்சங்களை கொண்டிருப்பதால், இந்த கவாஸாகி கான்கர்ஸ் 14 பைக்கை போலீஸ் பைக் என்றே குறிப்பிடுகின்றனர். குறைந்த வேகத்திலும் சிறந்த நிலைத்தன்மை, குற்றவாளிகளை துரத்திப் பிடிக்க சிறந்த செயல்திறன், கல்லெறி தாக்குதல்களிலும் ஈடுகொடுக்கும் வலிமையான பாகங்கள், எளிதான கையாளுமை போன்றவை இந்த பைக்கிற்கு உலக அளவில் காவல் துறை வட்டாரத்தில் அதிக வரவேற்பை பெற்றுத் தந்து வருகிறது.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

இசட்எக்ஸ்14ஆர் சூப்பர் பைக்கில் இருக்கும் அதே எஞ்சினில் சிறிய மாற்றங்களை செய்து, இந்த பைக்கில் 1,352சிசி திறனுடைய எஞ்சினாக பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 155 எச்பி பவரையும், 132 என்எம் டார்க்கையும் வழங்கும். தன்னிடம் இருக்கும் இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கும், இதற்கும் உள்ள வித்தியாசத்தை உணரும் ஆர்வத்திலேயே இந்த போலீஸ் பைக்கை ஓட்டி பார்த்திருக்கிறார் தோனி.

 ஏன்...?

ஏன்...?

தோனி பல பிராண்டு பைக் மாடல்களை வைத்திருந்தாலும், அவருக்கு கவாஸாகி பிராண்டின் மீது அதீத பற்று உண்டு. ஜிம்பாப்வே போலீஸ் வைத்திருந்த பைக் கவாஸாகி பிராண்டு என தெரிந்ததுமே, அதனை தயக்கமில்லாமல், கேட்டு வாங்கி ஓட்டியிருக்கிறார்.

தோனியிடம் கவாஸாகி பைக்குகள்

தோனியிடம் கவாஸாகி பைக்குகள்

ஏனெனில், கவாஸாகி பிராண்டு மீது அளப்பரிய பற்றும், நன்மதிப்பையும் கொண்டிருக்கிறார் தோனி. கவாஸாகி நின்ஜா இசட்14-ஆர் மற்றும் கவாஸாகி நின்ஜா எச்2 ஆகிய இரண்டு சூப்பர் பைக்குகள் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார்.

ஆர்வம்

ஆர்வம்

இந்தியாவில் கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் அறிமுகமானதுபோது முதல் ஆளாக அடித்து பிடித்து முன்பதிவு செய்து வாங்கிவிட்டார். மொத்தமே 5 பைக்குகளுக்குத்தான் முதலில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. அதில், ஒன்றை முன்பதிவு செய்து பெற்றுவிட்டார்.

அதுமட்டுமா...

அதுமட்டுமா...

சொந்தமாக பல சூப்பர் பைக்குகளை வாங்கி அடுக்கியதோடு, தோனியின் பைக் ஆசை நின்றுவிடவில்லை. சூப்பர்ஸ்போர்ட் வேர்ல்டு சாம்பியன்ஷிப் பைக் பந்தயத்தில் பங்கேற்பதற்காக சொந்தமாக ஒரு அணியை உருவாக்கினார். மஹி ரேஸிங் டீம் இந்தியா என்ற பெயரிலான அந்த அணிக்காக இரண்டு கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

கொஞ்சம் அதிகம்...

கொஞ்சம் அதிகம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தலைமையேற்று ஆடி வந்த தோனிக்கு, ராஞ்சிக்கு அடுத்து சென்னைதான் சொந்த ஊர் போல ஆகிவிட்டது. இதற்காக, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இரண்டு பைக்குகளை வாங்கி நிறுத்தி வைத்திருந்தார். சென்னை வரும்போதெல்லாம், இந்த பைக்குகளில் நகர் உலா வருவது அவரது வழக்கம்.

டோணியின் கராஜில் இருக்கும் டாப் 10 கார்கள் மற்றும் பைக்குகள்- சிறப்புத் தொகுப்பு!

டோணியின் கராஜில் இருக்கும் டாப் 10 கார்கள் மற்றும் பைக்குகள்- சிறப்புத் தொகுப்பு!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Why MS Dhoni Borrows A Police Motorcycle From A Zimbabwean Cop.
Story first published: Saturday, June 18, 2016, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X