வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

'மேக் இன் இந்தியா' திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஏன் வெளிநாட்டில் தயாரான காரை பயன்படுத்தி வருகிறார். அதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதுவரை இருந்த பிரதமர்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருபவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி மாறி இருக்கிறார். 'செல்லாது' அறிவிப்பு ஒருபுறம் வரவேற்பை பெற்ற போதிலும், அதன் பின் விளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வுடன், சரியாக திட்டமிடாமலும் செய்து விட்டதாக பலர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.

இதேபோன்று, மற்றொரு விமர்சனம் அவர் மீது சமீப காலமாக வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஏன் வெளிநாட்டில் தயாரான காரை பயன்படுத்தி வருகிறார் என்பதே. ஆனால், அதற்கு என்ன காரணங்கள் என்பதை இந்த செய்தி அலசி, ஆராய்கிறது.

மாடல் விபரம்

குஜராத் முதல்வராக இருந்த வரை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை மோடி பயன்படுத்தி வந்தார். ஆனால், பிரதமராக பதவியேற்ற பின் அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 760 எல்ஐ செக்யூரிட்டி எடிசன் என்ற காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்த துவங்கினார்.

மஹிந்திரா விருப்பம்

மஹிந்திரா விருப்பம்

பிரதமருக்கான அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஸ்கார்ப்பியோ காரை தயாரித்து கொடுக்க தயாராக இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் கூட ஆஃபர் கொடுத்தது. ஆனால், அந்த ஆஃபர் ஏற்கப்படாமல், பிஎம்டபிள்யூ காருக்கு பிரதமர் நரேந்திர மோடி மாறினார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்த நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வரும் பிரதமர் மோடி, ஜெர்மன் நாட்டு தயாரிப்பு காரை பயன்படுத்தி வருவதுதான் தற்போது செல்லாது அறிவிப்புடன் சேர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இறுதி முடிவு

இறுதி முடிவு

பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு காமாண்டோ படையினரின்[SPG] விசேஷ பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர். அவர் பயன்படுத்தும் காரில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த முடிவை எஸ்பிஜி போலீஸ் பிரிவுதான் எடுக்கிறது. அந்த அமைப்பு வகுத்துள்ள பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய காரை இந்திய நிறுவனங்களால் கட்டமைத்து கொடுக்க இயலாத நிலை இருக்கிறது.

விசேஷ தொழில்நுட்பம்

விசேஷ தொழில்நுட்பம்

இதுபோன்ற உயர்வகை பாதுகாப்பு கார்களில் பயன்படுத்தப்படும் உடல்கூடு பாகங்கள், அடிப்பாகங்கள், தொழில்நுட்பம் என அனைத்தும் விசேஷமானவை. அவை அதிகபட்ச உறுதியை பயணிகளுக்கு வழங்குகின்றன. ஆனால், அத்தகைய தொழில்நுட்பங்கள் இப்போது நம் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் இல்லை.

ரகசிய தயாரிப்பு முறை

ரகசிய தயாரிப்பு முறை

உதாரணத்திற்கு, பிரதமர் மோடி பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் எல்ஐ செக்யூரிட்டி எடிசன் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தாயகமான ஜெர்மனியில் உள்ள டிங்கோல்ஃபிங் ஆலையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு கார் ஆலைகள் செயல்படுகின்றன. ஏன் இந்தியாவில் கூட ஆலை உள்ளது.

அவ்வளவு சிறப்பு

அவ்வளவு சிறப்பு

ஆனாலும், ஜெர்மனியில் உள்ள டிங்கோல்ஃபிங் ஆலையில் மட்டுமே தயாரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த காரில் பயன்படுத்தப்படும் உலோகக் கலவைகள், கட்டமைப்பு முறை, வெல்டிங் தொழில்நுட்பம், அவசர கால பாதுகாப்பு வசதிகள் என அனைத்து தயாரிப்புகளும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு மட்டும்

வாடிக்கையாளர்களுக்கு மட்டும்

வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்கள் குறித்த விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும். அதேபோன்று, இந்த கார்களை இயக்குவதற்கும் ஜெர்மனியில் உள்ள ஆலையில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தளவு இந்த கார்களின் விஷயங்கள் ரகசியம் காக்கப்படுகிறது.

தாக்குதல் அபாயம்

தாக்குதல் அபாயம்

அடுத்ததாக, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி வகை மாடல். 190மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்ட கார். இதனால், எதிரிகள் பக்கத்திலிருந்து இந்த காரை எளிதாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், 152மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் எல்ஐ செக்யூரிட்டி கார் இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து எளிதாக தப்பும் என்று கருதப்படுகிறது.

பாதுகாப்பு அரண்

பாதுகாப்பு அரண்

அதாவது, பிரதமரின் பிஎம்டபிள்யூ காரை சுற்றிலும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி வகை கார்கள் பாதுகாப்பு அரணாக வருகின்றன. அப்போது தாழ்வாக இருக்கும் பிரதமரின் கார் தாக்குதலுக்கு எளிதாக இலக்காக முடியாது என்பது பாதுகாப்புப் படையினரின் கூற்றாக உள்ளது.

அம்பாசடர் பயன்பாடு

அம்பாசடர் பயன்பாடு

மேலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ காரை எஸ்பிஜி படையினரே இறுதி செய்கின்றனர். அவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே, அது எந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும் பயன்படுத்த முடியும். ஏற்கனவே, அம்பாசடர் கார்கள்தான் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்பட்டன.

நவீனம் அவசியம்

நவீனம் அவசியம்

ஆனால், தற்போது தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், நவீன தொழில்நுட்பங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு எளிதாக சென்றுவிடுவதால், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை எஸ்பிஜி படையினர் தேர்வு செய்கின்றனர். இதில், ரிஸ்க் எடுக்க அவர்கள் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

  • ஸ்கார்ப்பியோவுக்கு குட்பை... இதுதான் இனி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ கார்!
  • பாஜக.,வின் பிரம்மாஸ்திரம் நரேந்திர மோடி கார்- சிறப்பு பார்வை!
  • குண்டுதுளைக்காத அம்சத்தில் உலகின் டாப் 10 கார்கள்!
Most Read Articles
English summary
why PM Modi use a Made In Germany car for commuting?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X