விபத்துக்களை தவிர்க்க உதவும் வைஃபை ஹாரன்: புதிய மொபைல் ஆப்!

By Saravana

ஹாரன் அடித்து எச்சரிப்பதற்கு பதில் ஓட்டுனரையும், பாதசாரிகளையும் மொபைல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வைஃபை- ஹாங்க் என்று அழைக்கப்படும் இந்த புதிய எச்சரிக்கை அப்ளிகேஷன் கார் ஓட்டுனர்களுக்கும், பாதசாரிகளுக்கும் வரப்பிரசாதமாக அமையும் வாய்ப்புள்ளது.

இன்றைய காலத்தில் மியூசிக் கேட்டுக் கொண்டே சாலையை கடக்க முற்படுபவர்களாலும், மொபைல்போன் பேசிக் கொண்டே வருபவர்களாலும் ஏராளமான சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் விதத்தில் புதிய வைஃபை- ஹாரனை அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைகழக மென்பொருள் வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர்.

Wifi Honk

வைஃபை வசதி மூலம் பாதசாரிகளுக்கும், கார் ஓட்டுனர்களின் மொபைல்போன் மூலம் தொடர்பு ஏற்படுத்தி, அவர்களுக்கு இடையிலான தூரம் அபாயகரமானதா என்பதை கண்டறிந்து இந்த அப்ளிகேஷன் இருவரையும் எச்சரிக்கும். இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனில் இருக்கும் ஆப்ஷனில் நாம் நடந்து போகிறோமோ அல்லது காரில் செல்கிறோமோ என்பதை தேர்வு செய்துவிட்டால் போதுமானது.

அதற்கு தகுந்தாற்போல் செயல்படும். 100மில்லி செகண்ட்டுக்கு ஒருமுறை சிக்னலை அனுப்பிக் கொண்டே இருக்கும். மேலும், இந்த வசதி காரில் 120 கிமீ வேகம் வரை இந்த வசதி சிறப்பாக செயல்படும். உதாரணத்திற்கு சாலையை கடக்க முற்படும் பாதசாரி மீது கார் மோதும் அபாயம் இருந்தால் இந்த அப்ளிகேஷன் ஸ்மார்ட்போனில் அதிர்வுகள் அல்லது வாய்மொழி தகவல் மூலம் எச்சரிக்கும்.

இதேபோன்று பாதசாரி மொபைல்போனில் மியூசிக் கேட்டுக் கொண்டே சென்றாலும், பேசிக் கொண்டே சென்றாலும் இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பே எச்சரிக்கும். இதனால், விபத்துக்களை எளிதாக தவிர்க்க முடியும் என்று இந்த அப்ளிகேஷனை தயாரித்தவர்கள் கூறுகின்றனர்.

Most Read Articles
English summary

 Pedestrians, carried away listening to music on their phones or too indulged with their mobiles tend to veer off the sidewalk and into a speeding vehicles path. This is a very common incident. Now, a team from University of Missouri, Kansas City have come up with a solution - WiFi-Honk. Kaustubh Dhondge, a graduate student says the team have designed a software where you can determine if a pedestrian is going to cross the road or not into oncoming traffic and warn them.
Story first published: Saturday, July 19, 2014, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X