ஒளி புகும் தன்மை கொண்ட பாடியுடன் 'வில்லி' பஸ் கான்செப்ட்!

வாகனங்களின் பக்கவாட்டில் விளம்பரங்கள் செய்வது ஒன்றும் புதிதல்ல. ஸ்டிக்கர்களை ஒட்டி வண்ண மயமான பிரம்மாண்ட விளம்பரங்களை பஸ்களில் செய்வது நம்மூரில் கூட சாதாரணம்தான்.

இந்த வினைல் தொழில்நுட்பத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளார் டாட் ஓர்லோஸ்க் என்பவர். அப்படி என்னதான் அவர் புதுமையை படைத்தார், இப்போது கான்செப்ட் வடிவில் இருக்கும் இந்த தொழில்நுட்பம் நடைமுறையில் உபயோகமாக இருக்குமா அல்லது ஆபத்தை விளைவிக்குமா என்பதை ஸ்லைடரில் காணலாம்.

எல்சிடி திரை

எல்சிடி திரை

பஸ்சின் பக்கவாட்டு பகுதி முழுவதும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட எல்சிடி திரை பொருத்தப்பட்டுள்ளது.

 ஒரு விளம்பரம்

ஒரு விளம்பரம்

இந்த திரையில் விளம்பரங்களை ஒளிபரப்ப முடியும் என்பது டாட் வாதம். மேலும், இதிலிருந்து கூடுதல் வருவாயை ஈட்டலாம் என்கிறார் அவர்.

 தகவல் பலகை

தகவல் பலகை

பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளை வழித்தடத்தை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பஸ்சின் திரை மூலம் தகவல்களை தெரிவிக்க முடியும்.

பயணிகளுக்கு சவுகரியம்

பயணிகளுக்கு சவுகரியம்

சில சமயங்களில் கண்ணாடிகளில் ஒட்டப்படும் விளம்பரங்களால் பயணிகள் வெளியில் பார்க்க முடியாத சங்கடத்தை தரும். ஆனால், இது ஒளி புகும் தன்மை கொண்ட திரை என்பதால் பயணிகள் வெளிப்புறத்தை தெளிவாக பார்க்கலாமாம்.

கான்செப்ட்

கான்செப்ட்

இந்த புதிய தொழில்நுட்பத்தை பல்வேறு வகைகளில் வைத்து சோதனை செய்து வருகின்றனர். இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது குறித்தும், பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆபத்து

ஆபத்து

அடுத்த கட்டத்துக்கு இந்த தொழில்நுட்பத்தை எடுத்துச் செல்லப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமான திரையில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள், பஸ்சின் அருகில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கவனத்தை திசை திருப்பும். இதனால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இன்னொரு ஆபத்து

இன்னொரு ஆபத்து

இதன் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட திரை எந்தளவு வலுவானது என்பதும் சந்தேகத்திற்கிடமானதே. பஸ்சில் பிற வாகனங்கள் இடிக்கும்போது உள்ளே இருக்கும் பயணிகளுக்கு எவ்வகையில் பாதுகாப்பு இருக்கும் என்பதும் தெரியவில்லை. ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், இது நடைமுறையில் வரும்போது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போன்றதுதான். வில்லி பஸ் ரோட்டில் வில்லனாகாமல் இருந்தால் நல்லது.

Most Read Articles
English summary
Willie bus is a concept, a virtual concept to be exact, that designed by Tad Orlowski. The basic idea behind the Willie bus is a simple one. Turn the sides of the bus into a giant television.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X