பைக் ஓட்டுவதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்! - புட்டு வைக்கும் ஆய்வு!

மோட்டார்சைக்கிளை ஓட்டும் பெண்கள் பன்மடங்கு கூடுதல் மகிழ்ச்சியை பெறுவதாக ஹார்லி டேவிட்சன் வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்காக இந்த ஆய்வை கெல்டன் என்ற ஆய்வு நிறுவனம் நடத்தியது. அதில், மோட்டார்சைக்கிளை ஓட்டும் பெண்களுக்கும், மோட்டார்சைக்கிள் ஓட்டத் தெரியாத பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் சாரம்சத்தை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

ஆய்வு

ஆய்வு

மோட்டார்சைக்கிள் ஓட்டத் தெரிந்த 1,013 பெண்களிடமும், மோட்டார்சைக்கிள் ஓட்டத் தெரியாத 1,016 பெண்களிடமும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மகிழ்ச்சியின் காரணி

மகிழ்ச்சியின் காரணி

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகிழ்ச்சிக்கான முக்கிய காரணியமாக மோட்டார்சைக்கிளை கூறினர்.

 வாழ்க்கை தரம்

வாழ்க்கை தரம்

மோட்டார்சைக்கிள் ஓட்ட தெரிந்த பெண்களில் 74 சதவீதத்தினர், மோட்டார்சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பின்னர் தங்களது வாழ்வியல் நடைமுறை சிறப்பாக மேம்பட்டதாக தெரிவித்தனர்.

 வெளியுலக தொடர்பு

வெளியுலக தொடர்பு

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, வெளியுலகத் தொடர்பு எளிமையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால், இதனை மோட்டார்சைக்கிள் ஓட்டத் தெரியாத பெண்களில் 38 சதவீதத்தினர் ஆமோதிக்கவில்லை.

மன அழுத்தம் குறைகிறது

மன அழுத்தம் குறைகிறது

ஆய்வில் கலந்து கொண்ட மோட்டார்சைக்கிள் ஓட்டத் தெரிந்த பெண்களில் 34 சதவீத பெண்கள் கூறும்போது," பைக் ஓட்டுவதால் மன அழுத்தம் வெகுவாக குறைவதாக உணர்கிறோம்," என்றனர்.

 செக்ஸீஸீஸீ....!!

செக்ஸீஸீஸீ....!!

இவையெல்லாவற்றையும் விட தாங்கள் எந்நேரமும் மகிழ்ச்சியாகவும், இளமையுடன் செக்ஸியாக இருப்பது போன்று உணர்வதாகவும் மோட்டார்சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்கள் கூறினர். மோட்டார்சைக்கிள் ஓட்டத் தெரிவதன் மூலம் வாழ்க்கைத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய முடிவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Most Read Articles
English summary
women who ride motorcycles are happier: Survey. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X