முழுக்க முழுக்க மரத்தாலான வாகனங்கள்: ஓர் சிறப்பு தொகுப்பு

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் அருகிலுள்ள திஸ்ஸாரோஸ் நகரை சேர்ந்தவர் இஸ்த்வான் புஸ்காஸ்(52). டிராக்டர் டிரைவராகவும், மெக்கானிக்காகவும் இருந்து வரும் இவர் வாகனங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். ஏதாவது வித்தியாசமான வாகனங்களை தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்று வேட்கை கொண்டவர்.

அதன்படி, தட்பவெப்பங்களால் எளிதில் பாதிப்படையாத கருப்பு லோகஸ்ட் மரத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கினார். இதற்கு முன் மரத்தில் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை சாலையில் ஓட்டிச் செல்லும் நிலையில் இருந்ததில்லை. ஆனால், இவர் உருவாக்கிய மோட்டார்சைக்கிளில் எஞ்சின் துணையுடன் சாலையில் ஓட்டிச் செல்லும் அம்சங்களை கொண்டுள்ளது.

ஏ டூ இசட் மரம்

ஏ டூ இசட் மரம்

எஞ்சின், டயரை தவிர இருக்கை, எரிபொருள் தொட்டி, கியர் லிவர், முன்புற ஃபோர்க் தண்டுகள் உள்பட பெரும்பாலான பாகங்களை மரத்தில் வெகு அழகாக செதுக்கி மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளார். இஸ்த்வான்.

 மாட்டுக் கொம்பு

மாட்டுக் கொம்பு

மாட்டுக் கொம்பை மோட்டார்சைக்கிளின் கைப்பிடியாகவும், புகைப் போக்கி குழாயாகவும் பொருத்தியிருக்கிறார்.

எஞ்சின்

எஞ்சின்

போலந்தில் தயாரிக்கப்பட்ட பழைய ஃபியட் காரின் பெட்ரோல் எஞ்சின் ஒன்றையும் பொருத்தி தடதடவென சாலைகளில் ஓட்டி அனைவரையும் திரும்பி பார்க்கை வைத்துள்ளார்.

வேளாண் கருவிகள்

வேளாண் கருவிகள்

இந்த மர மோட்டார்சைக்கிளில் சில பாகங்களை டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகளில் இருந்து எடுத்து பொருத்தியிருக்கிறார்.

இப்போது கார்

இப்போது கார்

மோட்டார்சைக்கிளை வெற்றிகரமாக தயாரித்து முடிந்த இஸ்த்வான் தற்போது மரத்தாலான கார் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதற்கு அவரது மனைவி ஐரீன் கொடுத்த உற்சாகமும், ஒத்துழைப்புமே காரணம் என்று பெருமிதம் தெரிவிக்கிறார்.

 போலீஸ் அனுமதி

போலீஸ் அனுமதி

இஸ்த்வான் உருவாக்கியிருக்கும் மரத்தாலான காரை அவர் வசிக்கும் கிராமத்தில் மட்டுமே ஓட்டுவதற்கு உள்ளூர் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அந்த காரில் இஸ்த்வானும், அவரது மனைவியும் ஜோராக வலம் வருகின்றனர்.

எஞ்சின்

எஞ்சின்

பென்ஸ் காரிலிருந்து எடுக்கப்பட்ட எஞ்சின் மற்றும் ஸ்டீயரிங் வீலையும் இந்த காரில் பொருத்தியுள்ளார்.

அடுத்த புரொஜெக்ட்

அடுத்த புரொஜெக்ட்

அடுத்ததாக மரத்தலான 3 சக்கர கார் ஒன்றை வடிவமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, தனது மர மோட்டார்சைக்கிளை விற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து கேட்டால், வாகனங்களை நிறுத்தி பாதுகாக்க போதிய இடவசதியும், பண தேவையும் இருப்பதே காரணமாக கூறுகிறார்.

 ஓய்வு நேரத்தில்...

ஓய்வு நேரத்தில்...

விவசாயம் இல்லாத ஓய்வு நேரங்களில் இதுபோன்ற வாகனங்களை உருவாக்குவதில் பெரும் மகிழ்ச்சி கிட்டுவதாக அவர் கூறுகிறார். இவரை போன்ற உலகின் பிரபல டிசைனர்கள் மற்றும் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் உருவாக்கிய மரத்தாலான வாகனங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பிரம்பு கார்

பிரம்பு கார்

நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் தயாரித்த பிரம்பு கார்தான் இது. கூடுதல் தகவலுக்கு இந்த லிங்கை சொடுக்கவும்.

மோட்டார் இல்லம்

மோட்டார் இல்லம்

மரத்தில் செய்யப்பட்ட மோட்டார் ஹோம் இது. கலிஃபோர்னியாவை சேர்ந்த புரோட்டாஹாஸ் தயாரிப்பு இது.

ஸ்பிளின்டர் ஸ்போர்ட்ஸ் கார்

ஸ்பிளின்டர் ஸ்போர்ட்ஸ் கார்

அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தை சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர் ஜோ ஹார்மன் உருவாக்கிய மரத்தில் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் இது. இதில், 4.6 லி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 386 கிமீ வேகத்தில் செல்லத்தக்கதாக கூறப்படுகிறது. சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வில்லை.

அர்த்தநாரீஸ்வரர் கார்

அர்த்தநாரீஸ்வரர் கார்

உக்ரைன் நாட்டை சேர்ந்த வாசிலி லஸரென்கோ உருவாக்கிய மர கார் இது. காரின் ஒரு பாதி கன்வெர்ட்டிபிள் போன்றும், மறுபாதி கூரையுடன் கூடிய கார் போலவும் உருவாக்கியுள்ளார்.

மரத்தாலான வெஸ்பா

மரத்தாலான வெஸ்பா

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கார்பென்டரான கார்லோஸ் ஆல்பெர்டோ என்பவர் உருவாக்கிய மர வெஸ்பா ஸ்கூட்டர் இது. வெஸ்பா டேனியலா என்று பெயரிட்டுள்ளார்.

மர சைக்கிள்

மர சைக்கிள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் முசாஷினோ பல்கலைகழகத்தை சேர்ந்த யோஜிரோ ஓஷிமா என்ற மாணவர் உருவாக்கிய மர சைக்கிள் இது.

 ஃபெராரி படகு

ஃபெராரி படகு

வெனீஸ் நகரை சேர்ந்த பிரபல மர வேலைப்பாடு நிபுணரான லிவியோ டி மார்ச்சி உருவாக்கிய படகுதான் இது. இவர் ஏராளமான மர சிற்பங்களையும், கலை வண்ணம் மிக்க படகுகளையும் வடிவமைத்துள்ளார்.

கான்வெர்ட்டிபிள் கார்

கான்வெர்ட்டிபிள் கார்

அமெரிக்காவை சேர்ந்த மைக் மோரிஸ் உருவாக்கிய மரத்தில் செய்யப்பட்ட பாடியுடன் கூடிய கன்வெர்ட்டிபிள் கார்.

Most Read Articles
English summary
Ever wondered about some of the weirdest or wildest custom automobiles made out of wood in the world? In our thirst to figure this out, we stumbled on Istvan Puskas a wood enthusiast who has created a working car and motorcycle out of wood.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X