உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள்: விலை ரூ.2.2 கோடி

இதுவரை ஏராளமான ராட்சத மோட்டார்சைக்கிள்களை பார்த்துள்ளோம். கின்னஸ் சாதனை புரிந்த உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் பற்றிய செய்தியை சமீபத்தில் வழங்கியிருந்தோம்.

இந்த நிலையில், இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த லியோன்ஹார்டட் என்ற நிறுவனம் உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிளை வடிவமைத்துள்ளது. கன்பஸ் 410 என பெயரிடப்பட்ட அந்த மோட்டார்சைக்கிள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சாதனை

சாதனை

கன்பஸ் 410 மோட்டார்சைக்கிள் உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

சாதனைகளுக்காக சில மோட்டார்சைக்கிள்கள் வடிவமைக்கப்படுவதுண்டு. ஆனால், இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. லிமிடேட் எடிசனாக இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை மோட்டார்சைக்கிள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

பரிமாணம்

பரிமாணம்

11 அடி நீளம், 30 இஞ்ச் உயரத்தில் இருக்கை ஆகியவை கொண்ட இந்த மோட்டார்சைக்கிளுக்கு சைடு கார் உதவியுடன் மட்டுமே எடுத்துச் செல்வது சாத்தியமாக இருக்கும் என தெரிகிறது.

எடை

எடை

இந்த மோட்டார்சைக்கிள் 650 கிலோ எடை கொண்டது. அதிக எடை கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் மிகச்சிறந்த டிசைன் அதற்கு ஏற்ற பவர் கொண்டதாக சரியான விகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிசைன் செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் கற்பனையிலும் எட்டாத அளவிற்கு 350 எச்பி பவரையும், 691 என்எம் டார்க்கையும் அளிக்கும் 6,728சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் கியர்

ரிவர்ஸ் கியர்

3 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இந்த மோட்டார்சைக்கிளில் ரிவர்ஸ் கியர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட டயர்கள்

பிரம்மாண்ட டயர்கள்

இந்த மோட்டார்சைக்கிளுக்கு கம்பீரத்தை அள்ளி வழங்குவதற்கு டயர்களும் மிக முக்கிய காரணம். முன்புறத்தில் 38 இஞ்ச் டயரும், பின்புறத்தில் 42 இஞ்ச் டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

விலை

விலை

3.50 லட்சம் டாலர் விலையில், இந்திய மதிப்பில் ரூ.2.20 கோடி விலையில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
We have seen large motorcycles before. We have even come across motorcycles recognized as being the largest in the world by Guinness World Records. The bike we are going to talk about, however, is not the largest in the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X