உலகின் நீளமான பஸ் பற்றிய தகவல்கள்!

மினி ரயில் போன்ற உலகின் நீளமான பஸ் ஜெர்மனியில் சேவை புரிந்து வருகிறது. ஆட்டோ டிராம் எக்ஸ்ட்ரா கிராண்ட் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பஸ்சை ஃபிரான்ஹூபர் போக்குவரத்து கட்டமைப்பு நிறுவனம் டிசைன் செய்தது. ஜெர்மனியின் கிழக்குப் பகுதியிலுள்ள டிரெஸ்டென் நகரில் இயக்கப்படுகிறது,.

இதே பஸ் சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் சாங்காய் நகரங்களில் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. போக்குவரத்து தேவையை எளிதாக சமாளிக்கும் வகையிலான இந்த பஸ்சின் சுவாரஸ்யமான பின்னணி தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நீளம்

நீளம்

இந்த பஸ் 101 அடி நீளம் கொண்டது.

மல்டி ஆக்ஸில்

மல்டி ஆக்ஸில்

இந்த பஸ் 4 ஸ்டீயரிங் ஆக்சில்களை கொண்டது.

மினி ரயில்

மினி ரயில்

இந்த பஸ்சில் 256 பேர் பயணம் செய்ய முடியும்.

ஹைபிரிட் பஸ்

ஹைபிரிட் பஸ்

ஸ்டார்ட் செய்வதற்கும், நகர்வதற்கும் மட்டும் டீசல் எஞ்சினில் இயங்கும். மற்றபடி, இந்த பஸ் பெரும்பாலும் பேட்டரி சக்தியில் இயங்குவதால் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாது.

கம்ப்யூட்டர் டிரைவ் சிஸ்டம்

கம்ப்யூட்டர் டிரைவ் சிஸ்டம்

இந்த பஸ்சை ஓட்டுவதற்கு டிரைவருக்கு சிறப்பு லைசென்ஸ் எதுவும் தேவையில்லையாம். இந்த பஸ்சின் பாதுகாப்பு விஷயங்களுக்காகவும், டிரைவருக்கு தகவல்களை வழங்கும் விசேஷ கணிணி பொருத்தப்பட்டிருக்கிறது.

செலவீனம்

செலவீனம்

இந்த பஸ்சை வடிவமைக்க 10 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாம்.

இருந்தாலும்...

இருந்தாலும்...

இது உலகின் நீளமான பஸ்சாக இருந்தாலும், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட பஸ்சாக சீனாவில் இயக்கப்படும் நியூ லைனர் பஸ்கள் கருதப்படுகிறது. 82 அடி நீளம் கொண்ட நியூ லைனர் பஸ்களில் 300 பேர் பயணம் செய்யலாம்.

லண்டனில் தடை

லண்டனில் தடை

இதே போன்ற நீளமான பஸ்கள் லண்டனில் இயக்கப்பட்டன. ஆனால், அடிக்கடி விபத்து நிகழ்ந்தாலும், பாதுகாப்பு கருதியும் 2009ல் லண்டனில் பல வழித்தடங்களில் இந்த பஸ்கள் தடைசெய்யப்பட்டன.

விலை

விலை

ஒரு பஸ் 1.25 மில்லியன் டாலர் விலை கொண்டது.

Most Read Articles
English summary
World's longest bus is running in Germany. This 101ft long bus can carry 256 passengers at a time.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X