நீண்ட தூரம் பயணிக்கும் உலகின் டாப் 10 ரயில்கள்!

By Saravana Rajan

இந்தியா போன்று மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடுகளின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் ரயில்களின் பங்கு மகத்தானது. இதுபோன்ற நாடுகளில் நீண்ட தூரங்களுக்கு ரயில் பயணங்கள் மிகச்சிறப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. ஆனால், அதுவே போரடிக்கும் சமாச்சாரமாகவே அமைந்துவிடும். அதேநேரத்தில், பல நகரங்களுக்கு இடையில் இந்த ரயில்கள் சிறந்த இணைப்பு சேவையை வழங்குவதையும் பார்க்க வேண்டும்.

அந்த வகையில், உலகில் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறோம். இந்த பட்டியலில் இந்திய ரயில் ஒன்றும் இடம்பிடித்துள்ளது. ஸ்லைடரில் விபரங்களை காணலாம்.

10. புளூ ட்ரெயின்- தென் ஆப்ரிக்கா

10. புளூ ட்ரெயின்- தென் ஆப்ரிக்கா

பயண தூரம்: 1,599 கிமீ

தென் ஆப்ரிக்காவின் மத்திய பகுதியின் வழியாக குறுக்காக செல்லும் வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயில், அந்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் வழியாக செல்கிறது. மேலும், இந்த ரயில் சொகுசு வசதிகள் பலவற்றையும் கொண்டிருக்கிறது. பிரிடோரியா நகரில் இருந்து கேப் டவுன் நகரை 27 மணி நேரத்தில் அடைகிறது. இந்த ரயலின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட பாரும், ரெஸ்ட்டாரண்டும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமானது. இந்த ரயிலில் பயணிக்க ஒருவழி கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.76,000 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

09. ஈஸ்டன் அண்ட் ஓரியண்டல் எக்ஸ்பிரஸ்

09. ஈஸ்டன் அண்ட் ஓரியண்டல் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 2,180 கிமீ

பேங்காக் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் இந்த ரயில் மூன்று பகல், இரண்டு இரவுகளில் இந்த இரு இடங்களையும் இணைக்கிறது. ஒரு வழிக்கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.3,519 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், க்வாய் ஆற்றுப்பாலம், ஹூவா ஹின் போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்கிறது.

08. தி கான்- ஆஸ்திரேலியா

08. தி கான்- ஆஸ்திரேலியா

பயண தூரம்: 2,978 கிமீ ஆஸ்திரேலியாவின் தென் கடலோரத்தில் அமைந்திருக்கும் அடிலெய்டு நகரில் இருந்து வட கடலோர பகுதியில் இருக்கும் டார்வின் நகரை இணைக்கிறது. இந்த ரயில் மூன்று நாட்கள் பயண நேரத்தில் இந்த இரு நகரங்களையும் இணைக்கிறது. ஒரு வழிக்கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.43,000 ஆக உள்ளது.

07. பாரிஸ் - மாஸ்கோ

07. பாரிஸ் - மாஸ்கோ

பயண தூரம்: 3,215 கிமீ

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை இணைக்கிறது. ஐரோப்பாவின் மிக நீண்ட தூர பயணிகள் ரயிலாக குறிப்பிடப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பயணிக்கும் இந்த ரயிலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக ரூ.16,700 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விசாக் கட்டணம் தனி. 48 மணி நேரத்தில் இந்த ரயில் இரு நகரங்களையும் இணைக்கிறது.

06. கலிஃபோர்னியா ஸிஃபைர் - அமெரிக்கா

06. கலிஃபோர்னியா ஸிஃபைர் - அமெரிக்கா

பயண தூரம்: 3,923 கிமீ

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரையும், சிகாகோ நகரையும் இணைக்கிறது. உலகிலேயே இயற்கை எழில் கொஞ்சும் ரயில் வழித்தடங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. கொலராடோ ஆறு, நெவடா வறண்ட நிலப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்த ரயில் பயணிக்கிறது. இந்த ரயில் 51 மணிநேரத்தில் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறது. ஒருவழிக்கட்டணமாக ரூ.9,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 05. விவேக் எக்ஸ்பிரஸ்

05. விவேக் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 4,237 கிமீ

இந்த பட்டியலில் இந்தியாவின் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலும் இணைந்துள்ளது. நாட்டின் வடகிழக்கு பிரதேசத்தையும், தென்கோடியையும் இணைக்கும் இந்த ரயில் பல்வேறு கலாச்சாரங்களையும், மாநிலங்களையும் கடந்து பயணிக்கிறது. அசாம் மாநிலம், திப்ரூகரிலிருந்து தென்கோடி முனையாக அமைந்திருக்கும் கன்னியாகுமரியை இணைக்கிறது. சராசரியாக மணிக்கு 51 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் 82 மணி நேரம் எடுத்துக் கொண்டு ஒரு வழி பயணத்தை நிறைவு செய்கிறது.

 04. இந்தியன் பசிபிக்- ஆஸ்திரேலியா

04. இந்தியன் பசிபிக்- ஆஸ்திரேலியா

பயண தூரம்: 4,351 கிமீ

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரையும், பெர்த் நகரத்தையும் இணைக்கும் இந்த ரயில் வழித்தடம்தான், உலகின் மிகவும் நேர் கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் வழித்தடமாக இது கருதப்படுகிறது. 65 மணி நேரத்தில் இரு நகரங்களையும் இந்த ரயில் இணைக்கிறது. ஒரு வழிக்கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.45,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 03. ஷாங்காய்- லாஸா [சீனா]

03. ஷாங்காய்- லாஸா [சீனா]

பயண தூரம்: 4,372 கிமீ

உலக அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து லாஸா நகருக்கு இடையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திபெத்தின் இயற்கை வனப்பு மிகுந்த பகுதிகள், பனிக்கட்டி மலைகள், மத்திய சீனாவின் சமவெளி பிரதேசங்களை கடந்து செல்லும் இந்த ரயிலும் இயற்கை எழில் கொஞ்சும் ரயில் வழித்தடங்களில் ஒன்று. 47 மணி 40 நிமிடங்கள் பயண நேரம் கொண்டது. ஒரு வழியில் பயணிப்பதற்கு இந்திய மதிப்பில் ரூ.3,810 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

02. தி கனடியன் - கனடா

02. தி கனடியன் - கனடா

பயண தூரம்: 4,465 கிமீ

கடனா நாட்டின் டொரண்டோவிலிருந்து வான்கூவர் நகரத்துக்கு இயக்கப்படுகிறது. கனடா நாட்டின் அடர்ந்த வனப்பகுதிகள், பனிக்கட்டி மலைகள் சூழ்ந்த பிரதேசங்கள் வழியாக பயணிக்கிறது. மூன்று நாட்கள் பயண நேரத்தில் இரு நகரங்களையும் இணைக்கும் இந்த ரயிலில் பயணிப்பதற்கு குறைந்தபட்சமாக ரூ.18,483 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

01. ட்ரான்ஸ் சைபீரியன்- ரஷ்யா

01. ட்ரான்ஸ் சைபீரியன்- ரஷ்யா

பயண தூரம்: 9,258 கிமீ

உலகின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் என்ற பெருமையை ட்ரான்ஸ் சைபீரியன் பெறுகிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டோக் நகருக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. பல்வேறு கால மண்டலங்களை தாண்டி இந்த ரயில் பயணிக்கிறது. சைபீரிய பனிப் பிரதேசத்தை கடந்து பயணிக்கும் இந்த ரயில் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான பைக்கால் வழியாகவும் செல்வதால் சுற்றுலாப் பயணிகளிடம் பிரபலமாக இருக்கிறது. 6 நாட்களில் இரு நகரங்களையும் இணைக்கிறது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.47,500.

இதர ரயில்கள்

இதர ரயில்கள்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் இடையே இயக்கப்படும் டிரான்ஸ் மங்கோலியன்[7,826 கிமீ] மற்றும் ட்ரான்ஸ் மஞ்சூரியன் [8,984 கிமீ] ஆகிய ரயில்களும் உலகின் மிக நீண்ட தூர ரயில்களாக இருக்கின்றன.

இந்தியாவின் மிக நீண்ட தூர ரயில்... விவேக் எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்தியாவின் மிக நீண்ட தூர ரயில்... விவேக் எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World's Longest Train Journeys.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X