உலகின் மிக உயரமான சாலையில் பயணித்து அசத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

By Saravana

உலகின் மிக உயரமான போக்குவரத்து சாலையில் பயணித்து யோ பைக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய சாதனை படைத்துள்ளது.

உலகிலேயே இவ்வளவு உயரமான சாலையில் பயணித்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையுயம் பெற்றிருக்கிறது. சாதனை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சாதனைக்காக...

சாதனைக்காக...

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் யோபைக்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமாகிய எலக்ட்ரோதெர்ம் இந்தியா நிறுவனமும், குளோபல் ஹிமாலயன் எஸ்படிஷன் என்ற பயண ஏற்பாட்டு அமைப்பும் இணைந்து இந்த சாதனைக்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

அசத்தல்...

அசத்தல்...

நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கர்துங்லா கணவாய் பகுதியை 4 மணிநேரத்தில் யோபைக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடைந்தன. இடையில் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கா ஒருமணி நேரம் பயணத்தின் நடுவே இடைவேளை எடுத்துக் கொள்ளப்பட்டது.

சரிவு பாதை

சரிவு பாதை

பொதுவாகவே பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் சரிவான பாதைகளில் செல்வதற்கு சிரமமப்படும் என்ற கூற்றை உடைக்கும் விதத்தில் இந்த சாதனை அமைந்தது. 4.6 டிகிரி கோணத்திலும், அதற்கும் மேலான சரிவுப் பாதைகளிலும் மிகச் சிறப்பாக ஏறியது யோ பைக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.

காலநிலை

காலநிலை

மிகவும் வெப்பமான கால நிலை நிலவியபோதிலும், யோ பைக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எந்த பிரச்னையுமின்றி, அந்த கரடு முரடான சாலையில் பயணித்து இலக்கை எட்டியது.

 நோக்கம்

நோக்கம்

சூரிய மின்சக்தி பயன்பாடு மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டையும், வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 ஸ்கூட்டர் மாடல்

ஸ்கூட்டர் மாடல்

யோ பைக்ஸ் நிறுவனத்தின் YOEXL ER என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்தான் இந்த சாதனை பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த ஸ்கூட்டர் 138 கிலோ எடை கொண்டது.

 பேட்டரி

பேட்டரி

இந்த ஸ்கூட்டரில் 48V, 48Ah பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 3 ரூபாய் 25 காசுகள் மட்டுமே செலவாகும். ஒரு முழு சார்ஜுக்கு 60 கிமீ தூரம் வரை பயணிக்கும். ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிக்க 27 காசுகள் மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் ஆற்றல்வாய்ந்த 1 KW மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

 கர்துங் லா கணவாய் பற்றி...

கர்துங் லா கணவாய் பற்றி...

காஷ்மீர் மாநிலத்தில் அமைந்திருக்கும் கர்துங்லா கணவாய் உலகின் மிக உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக குறிப்பிடப்படுகிறது. இந்த கர்துங்லா கணவாய் கடல் மட்டத்திலிருந்து சுமார் 18,380 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் சாகசப் பயண விரும்பிகளின் வாழ்நாள் பயண இலக்குகளில் ஒன்றாக விளங்குகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World's first Electric Bike Journey to Khardung La (18000 ft+)by Global Himalayan Expedition completed successfully
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X