விண்ணை முட்டும் உலகின் மிக உயரமான பாலம்: சீனாவில் திறப்பு!

Written By:

தரையிலிருந்து 1,854 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.

பொறியியல் துறையின் வல்லமையை பரைசாற்றும் விதமாக கட்டி முடிக்கப்பட்டு இருக்கும், இந்த விண்ணை முட்டி நிற்கும் பாலத்தின் கூடுதல் சிறப்புகளையும், தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

தென்மேற்கு சீனாவில் மலைப்பாங்கான நில அமைப்பில் உள்ள யுனான் மற்றும் குய்ஸோகூ ஆகிய இரண்டு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே ஓடும் சி து ஆற்றில் குறுக்கே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மிகப்பெரிய கான்கிரிட் கோபுரங்களுக்கு இடையில் இந்த பாலம் தொங்கும் பாலமாக கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் பொதுபயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதையடுத்து, யுனான் மாகாணத்தில் உள்ள ஜுவான்வெய் மற்றும் குய்ஸோகூ மாகாணத்தில் உள்ள ஷூயிசெங் ஆகிய நகரங்களுக்கு இடையில் 4 மணிநேரமாக இருந்த பயண நேரம் இந்த புதிய பாலம் திறக்கப்பட்டதையடுத்து ஒரு மணிநேரத்திற்கும் கீழாக குறையும்.

இந்த பாலத்தின் மூலமாக பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு மிக ஏதுவாக அமையும். இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பிற பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கும் இது மிகச் சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரும் என்று சீன போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகிலேயே அதி உயரமான 8 பாலங்கள் சீனாவில் உள்ளன. தற்போது ஹூபே மாகாணத்தில் உள்ள ஸீடு ஆற்றின் குறுக்கே மற்றொரு பாலம் நிலத்திலிருந்து 4,400 அடி உயரத்தில் கட்டி வருகிறது. ரூ.1,000 கோடி மதிப்பில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இது திறக்கப்படும்போது உலகின் அதி உயரமான பாலம் என்ற பெருமையை பெறும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World’s highest bridge opens in China.
Please Wait while comments are loading...

Latest Photos