உலகின் மிகப்பெரிய கார் பார்க்கிங் வளாகங்கள்!

By Saravana

கார் டிரைவிங்கில் மிகுந்த வலியை ஏற்படுத்தும் விஷயம் பார்க்கிங் இடம் இல்லாமல் அல்லாடுவது. நெரிசல் மிகுந்த காரில் பகுதிகளுக்கு செல்லும்போது பார்க்கிங் கிடைக்காமல் கிலோமீட்டர் கணக்கில் சுற்றி வரும்போது ஏற்படும் எரிச்சல் ஏன்டா, கார் வாங்கினோம் என்ற அளவுக்கு கொண்டு வந்துவிட்டுவிடும். இந்த நிலையில், சில இடங்களுக்கு செல்லும்போது பார்க்கிங் பிரச்னையே இருக்காது.

அந்த அளவுக்கு சிறப்பான பார்க்கிங் வசதிகளை செய்து வைத்திருப்பர். விமான நிலையங்கள், பெரிய வணிக வளாகங்களில் தற்போது பார்க்கிங் பகுதி சிறப்பாக அமைக்கப்படுகிறது. அதுபோன்று, உலகில் இருக்கும் மிகப்பெரிய கார் பார்க்கிங் பகுதிகள் பெரும்பாலும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 வெஸ்ட் எட்மான்ட்டன் மால்

வெஸ்ட் எட்மான்ட்டன் மால்

கனடா நாட்டின் அல்பெர்ட்டா நகரிலுள்ள வெஸ்ட் எட்மான்ட்டன் வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் ஒரே நேரத்தில் 20,000 கார்களை நிறுத்த முடியுமாம். மேலும், இந்த பார்க்கிங் லாட் உலகின் மிகப்பெரிய பார்க்கிங் லாட் என்ற கின்னஸ் சாதனையை பதிவு செய்துள்ளது.

 சீட்டில் ஏர்போர்ட்

சீட்டில் ஏர்போர்ட்

சீட்டில் ஏர்போர்ட்டில் இருக்கும் பார்க்கிங் பகுதியில் ஒரே நேரத்தில் 13,000 கார்களை நிறுத்த முடியும். அதுவும், இந்த பார்க்கிங் பகுதி ஒரே பகுதியாக கட்டப்பட்டுள்ளது.

டெட்ராய்ட் ஏர்போர்ட்

டெட்ராய்ட் ஏர்போர்ட்

டெட்ராய்ட் விமானநிலையத்தில் இருக்கும் பார்க்கிங் லாட்டில் ஒரே நேரத்தில் 11,500 கார்களை நிறுத்த முடியும்.

 யுனிவர்சல் ஸ்டூடியோஸ்

யுனிவர்சல் ஸ்டூடியோஸ்

உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் ஸ்டூடியோவில் இருக்கும் பார்க்கிங் பகுதியில் 10,200 கார்களை நிறுத்த முடியுமாம்.

டிஸ்னி வேர்ல்டு

டிஸ்னி வேர்ல்டு

டிஸ்னி வேர்ல்டு மேஜிக் கிங்டம் பகுதியில் இருக்கும் கார் பார்க்கிங் வளாகத்தில் 11,000 கார்களை நிறுத்த முடியும்.

டிஸ்னிலேண்ட் பார்க்கிங்

டிஸ்னிலேண்ட் பார்க்கிங்

டிஸ்னி லேண்ட் மிக்கே அன்ட் ப்ரண்ட்ஸ் கார் பார்க்கிங் பகுதியில் 10,000 கார்களை நிறுத்த முடியும். 2,000வது ஆண்டு இந்த பார்க்கிங் திறக்கப்பட்டது.

சிகாகோ ஏர்போர்ட்

சிகாகோ ஏர்போர்ட்

சிகாகோ விமான நிலையத்தில் இருக்கும் கார் பார்க்கிங் பகுதியில் 9,266 கார்களை நிறுத்த முடியும்.

டொரன்டோ ஏர்போர்ட்

டொரன்டோ ஏர்போர்ட்

கனடாவின் டொரன்டோ விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்தில் 9,000 கார்களை நிறுத்த முடியும்.

 பால்டிமோர் ஏர்போர்ட்

பால்டிமோர் ஏர்போர்ட்

பால்டிமோர் விமானநிலையத்தில் 8,400 கார்களை நிறுத்த முடியும். இந்த பார்க்கிங் லாட் ஸ்மார்ட் பார்க் தொழில்நுட்ப வசதியை கொணடிருப்பதால், கார் நிறுத்துவதற்கு எங்கு இடம் காலியாக உள்ளது என்பதை டிரைவர்களுக்கு தெரிவிக்கும் வசதி இருக்கிறது.

 டல்லாஸ் ஏர்போர்ட்

டல்லாஸ் ஏர்போர்ட்

டல்லாஸ் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் 8,100 கார்களை நிறுத்த முடியும்.

Most Read Articles
English summary
Packing cars into buildings is more efficient space-wise, and, provided they're built properly, concrete garages last considerably longer than asphalt lots, which usually give out after about 20 years.
Story first published: Wednesday, April 17, 2013, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X