ஒரு வீட்டில் இரண்டு கார் முதல் 5 கார் வரை வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். விண்டேஜ் கார் சேகரிப்பாளர்கள் 10 முதல் 15 கார்கள் வைத்திருப்பர். ஆனால், அபுதாபியை சேர்ந்த ஷேக் ஹமாத் பின் ஹம்தன் அல் நயான் என்பவரிடம் 200க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் டிரக்குகள் இருக்கின்றன. அவரிடம் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கும். உலகிலேயே அதிக வாகனங்களை வைத்திருக்கும் 'மகா' மனிதர் இவர்தான்.
இவரின் அடைமொழிப் பெயர் என்ன தெரியுமா? ரெயின்போ ஷேக். திருமணமான புதிதில் 7 பென்ஸ் கார்களை வாங்கிய இவர் ஒவ்வொரு காருக்கும் வானவில்லில் இருக்கும் ஒவ்வொரு வண்ணத்தை பெயின்டிங் செய்து வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரில் முன்பு செல்வாராம். பென்ஸ் உற்பத்தி பிரிவில் இந்த கார்கள் தயாரிக்கும்போது பிற கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ஷேக்கின் பவர் என்னவென்று. தற்போது இந்த கார்கள் மியூசியத்தில் காட்சி பொருளாகிவிட்டன. எனவேதான், இவருக்கு ரெயின்போ ஷெக் என்று பெயர் வந்தது.
மேலும், வாகன சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் சொந்தமாக பிரம்மாண்டமான வாகன மியூசியமே வைத்துள்ளார். அதில், உலகின் மிகப்பெரிய, டிரக், ஜீப் ஆகியவை அடக்கம். இந்த செய்தித்தொகுப்பில் அவர் வைத்திருக்கும் மெகா வாகனங்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
பிரமிட் மியூசியம்
வாகனங்களுக்கென 100 மீட்டர் நீள அகலம் கொண்ட பிரமிட் வடிவிலான பிரம்மாண்ட மியூசியத்தை அமைத்துள்ளார் ரெயின்போ ஷேக். இங்குதான் இவர் சேகரித்த நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதனை பொதுமக்கள் பார்வையிடவும் முடியும். அபுதாபியிலிருந்து 45 நிமிடங்களில் இந்த மியூசியத்தை அடைந்துவிடலாம்.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
உலகின் மிகப் பெரிய டிரக்
உலகின் மிகப்பெரிய டிரக் ஒன்றை ரெயின்போ ஷேக் பெரும் பொருட்செலவில் கட்டியுள்ளார். டோட்ஜ் பவர் வேகன் டிரக்கின் மாதிரியை அடிப்படையாக கொண்டு இந்த பிரம்மாண்ட டிரக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மியூசியத்தில்...
பிரமிட் வாகன மியூசியத்தில்தான் இந்த டிரக் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
எடை
இந்த டிரக் 50 டன் எடை கொண்டது. இதன் கேபினில் 4 பெரிய குளிர்சாதன வசதி கொண்ட அறைகள், வரவேற்பு அறை, குளியல் மற்றும் கழிவறைகள் உள்ளன.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
டிரக்கின் மறுபக்கம்
எடையை பார்த்து மலைத்து விட்டீர்களா. இந்த டிரக் மியூசியத்தின் வெளியில் கட்டப்பட்டு பின்னர்தான் மியூசியத்தின் உள்ளே கொண்டு வரப்பட்டது.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
64 மடங்கு பெரியது
நிஜ டோட்ஜ் வேகன் டிரக்கை விட டயர், முகப்பு என அனைத்தும் மாதிரி மாடல் 64 மடங்கு பெரியது. இதன் பின்புற கதவை திறந்தால் அது படுக்கை அறையின் பால்கனியாக வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
எஞ்சின்
6 சிலிண்டர்களுடன் 300 குதிரைசக்தி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிரக்கின் 25 முக்கிய பாகங்கள் அபுதாபியில் தயாரிக்கப்பட்டு பின்னர் அசெம்பிள் செய்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
ஷேக்கின் வாகன கலெக்ஷன்
இதுதான் உண்மையான டோட்ஜ் பவர் வேகன். இதனை அடிப்படையாக கொண்டுதான் உலகின் மிகப்பெரிய டிரக் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
ஷேக்கின் வாகன கலெக்ஷன்
அடுத்தடுத்த படங்களில் ஷேக்கின் வித்தியாசமான வாகன மாதிரிகளை பார்க்கலாம்.
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
மனதை 'ஷேக்' செய்யும் அபுதாபி ஷேக்
ஷேக்கின் கலெக்ஷனில் இதுவும் உண்டு
மியூசியத்தின் வாசலில் நிற்கும் விமானம்
Story first published: Wednesday, February 6, 2013, 11:03 [IST]
English summary
When we were looking for some whacked out and interesting world records, we came across the name of Sheikh Hamad bin Hamdan Al Nahyan of Dubai. The man has been nick named as the Rainbow Sheikh after he bought seven Mercedes-Benz sedans and had them painted in the seven colours of the rainbow for each day.