உலகின் மிகப் பெரிய விமான 'கல்லறைத் தோட்டம்"!

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்திலுள்ள டுசான் நகரில் உலகின் மிகப்பெரிய விமான பராமரிப்பு மற்றும் புனரமைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ பயன்பாட்டு விமானங்கள் மற்றும் அந்நாட்டு தேசிய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் இங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் 3வது பெரிய டேவிஸ் மான்தன் விமானப் படை தளத்தையொட்டிய பகுதியில் இந்த பிரம்மாண்ட விமான பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதனை அமெரிக்க விமானப் படையின் தளவாட பராமரிப்பு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.


ராணுவ விமானங்கள்

ராணுவ விமானங்கள்

விமானப் படை, கப்பல் படை, கடலோர காவல் படை, தரைப்படை என அமெரிக்காவின் அனைத்து ராணுவப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட்ட விமானங்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன. தவிர, அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து நிறுவனங்களின் விமானங்களும் இங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளன.

Photo Credit: R Morris

 புனரமைப்புப் பணிகள்

புனரமைப்புப் பணிகள்

இந்த பராமரிப்பு மையத்தில் ஒரு பகுதி கல்லறைத் தோட்டமாக இருக்கிறது. இதைதவிர்த்து, விமானங்களை உடைப்பது, பராமரிப்பது, தேவைப்பட்டால் மிக குறுகிய காலத்தில் புனரமைப்பு செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இங்கு உள்ளன.

Photo Credit: R Morris

பரந்த பகுதி

பரந்த பகுதி

சுமார் 2,600 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான பராமரிப்பு மையம் அமைந்துள்ளது.

Photo Credit: R Morris

நிறுத்தும் வசதி

நிறுத்தும் வசதி

தற்போது இங்கு 4,200 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பல்வேறு வகையான ராணுவ தளவாடங்கள் மற்றும் கருவிகளும் இங்கு பராமரிக்கப்படுகின்றன.

Photo Credit: R Morris

கட்டமைப்பு வசதிகள்

கட்டமைப்பு வசதிகள்

இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விமானங்கள் தூசி, சூரிய ஒளி, அதிக வெப்பம் போன்றவற்றிலிருந்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Photo Credit: R Morris

 பணியாளர்கள்

பணியாளர்கள்

இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விமானங்களை பராமரிப்பதற்காக 600 பணியாளர்கள் இருக்கின்றனர்.

Photo Credit: AMARC

வறண்ட வானிலை

வறண்ட வானிலை

விமான பராமரிப்பு இருக்கும் பகுதியில் ஆண்டு முழுவதும் வறண்ட வானிலை நிலவுவதும் இங்கு விமான பராமரிப்பு மையம் தொடர்ந்து செயல்படுவதற்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

Photo Credit: AMARC

 சுற்றுலாத் தலம்

சுற்றுலாத் தலம்

இந்த விமான பராமரிப்பு மையம் மற்றும் பிமா விமான கண்காட்சியகத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விமான பராமரிப்பு மையத்தை சுற்றிப் பார்க்க பஸ் வசதி உள்ளது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் விமானங்கள் குறித்த தகவல்களை வழிகாட்டி மூலம் தெரிந்துகொள்ளலாம். அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை இந்த விமான பராமரிப்பு மையத்தை சுற்றிப் பார்க்கலாம்.

Photo Credit: AMARC

நிரந்தர ஓய்வு

அலாதியான சப்தத்தால் கிடுகிடுக்க வைத்த விமானங்கள் சப்த நாடியும் ஒடுங்கி நின்று அமைதியின் உருவமாய் ஓய்வெடுக்கும் காட்சியை வீடியோவில் காணலாம். இதுவும் ஒரு வாழ்க்கைப் பாடம்தான்...!!

Most Read Articles
English summary
World's Biggest Plane Boneyard in US. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X