ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

By Saravana Rajan

ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானத்தை ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ளன. அந்நாட்டில் உள்ள ஸ்டட்கர்ட் விமான நிலையத்தில் இந்த புதிய விமானத்தை சில நாட்களுக்கு முன் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனையும் நடத்தி அசத்தியிருக்கின்றனர்.

விமான தயாரிப்பிலும், போக்குவரத்திலும் புதிய மைல்கல்லாக கருதப்படும் இந்த ஹைட்ரஜன் விமானத்தை பற்றிய விரிவான தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

HY4 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானத்தை, டிஎல்ஆர் இன்ஸ்டியூடிட் ஆஃப் எஞ்சினியரிங் தெர்மோடைனமிக்ஸ், ஹைட்ரோஜெனிக்ஸ், பிப்பிஸ்ட்ரெல், எச்2ஃப்ளை, யுஎல்எம் பல்கலைகழகம் மற்றும் ஸ்டட்கர்ட் விமான நிலைய கட்டுப்பாட்டு நிறுவனம் போன்ற பல நிறுவனங்களின் பொறியாளர்கள் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

இரண்டு உடல்கூடு பாகங்களை ஒன்றிணைத்தது போன்று இந்த விமானத்தை வடிவமைத்துள்ளனர். இறக்கை நீளம் மட்டும் 70 மீட்டர். ஒவ்வொரு உடல்கூட்டிலும் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்க முடியும்.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

விமானத்தின் இரண்டு உடல்கூடுகளிலும் தலா 9 கிலோ கொள்திறன் கொண்ட ஹைட்ரஜன் டேங்குகள் உள்ளன. இவற்றிலிருந்து சவ்வூடு பரவல் முறையில் 4 சவ்வுகள் மூலமாக செலுத்தப்படும் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் கலக்கப்பட்டு, அதிலிருந்து உருவாகும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

இரண்டு உடல்கூடுகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் புரொப்பல்லர் மின்மோட்டார் மூலமாக இயக்கப்படுகிறது. கழிவுப்பொருளாக நீர் மட்டுமே வெளியேறும் என்பதுதான் இதன் மிக முக்கிய சிறப்பு.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

ஒருமுறை ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்பினால் அதிகபட்சமாக 1,500 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த விமானத்தில் 80kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. டேக் ஆஃப் செய்யும்போது மட்டும் அதிக மின்திறனை அளிக்க வல்ல லித்தியம் பாலிமர் பேட்டரியில் மின்மோட்டார் இயங்கும்.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

பறக்கும்போது சாதாரண பேட்டரியில் இயங்கும். மணிக்கு அதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் பறக்குமாம். சாதாரணமாக 145 கிமீ வேகத்தில் பறக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

பெட்ரோலில் இயக்கப்படும் விமானங்களிலிருந்து அதிக அளவு நச்சுப் பொருட்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த ஹைட்ரஜன் எரிபொருள் விமானத்திலிருந்து நீர் மட்டுமே கழிவுப்பொருளாக வெளியேறுவதால் மாசு உமிழ்வு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இதனால், சுற்றுப்புற சூழல் மாசுபடுவது வெகுவாக தவிர்க்க முடியும்.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

இந்த விமானம் ஸ்டட்கர்ட் விமான நிலையத்தை சுற்றி வட்டமடித்து வந்து தரையிறங்கியது. முதல்முறை சோதனை ஓட்டத்தின்போது 15 நிமிடங்கள் மட்டுமே பறந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதையடுத்து, வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு ஏற்ற ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் விமானத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

புதிய விமானத்தில் 19 பேர் வரை பயணிக்கும் வசதியுடன் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஏர்பஸ், போயிங் போன்ற ஜாம்பவான் விமான தயாரிப்பு நிறுவனங்களும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் விமானங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம்!

ஆனால், இதுதான் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் 4 சீட்டர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கால போக்குவரத்தில் இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் விமானம் புதிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World’s first hydrogen fuel-cell plane takes off in Germany. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X