கார் பந்தயத் தடம் கொண்ட உலகின் முதல் சொகுசுக் கப்பலில் இருக்கும் அற்புதங்கள்..!

Written By:

ரேஸ் கார்கள் ஓட்டக்கூடிய பந்தய தடம் கொண்ட உலகின் முதல் கப்பல், பல்வேறு பிரம்மாண்ட வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

கப்பல்களை எப்போதும் பூலோக சொர்க்கம் என்று கூறுவார்கள். அந்தளவுக்கு உலகில் இருக்கக்கூடிய அனைத்து சொகுசு மற்றும் ஆடம்பர சமாச்சாரங்களையும் இதில் ஒருங்கே வடிவமைத்து விடுகின்றனர்.

மால்கள், திரையரங்கங்கள், நீச்சள் குளம், நட்சத்திர விடுதிகள், கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, கோல்ஃப் மைதானம்.

நட்சத்திர ஹோட்டல்கள், காஸினோ, ஸ்பா, கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்கள் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து வியக்க வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த ‘நார்வீஜியன் க்ரூஸ் லைன்ஸ்' என்ற சொகுசுக் கப்பல் இயக்கும் நிறுவனத்தினரால் இந்த ஆடம்பர கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீன சந்தைக்காக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு ‘நார்வீஜியன் ஜாய்' என பெயரிட்டுள்ளனர்.

இந்தக்கப்பலின் மேல்தளங்களில் இரண்டு அடுக்கு பந்தய தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பந்தய தடம் உலகின் தலைசிறந்த ஃபெராரி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபெராரி பிராண்டட் பந்தய தடம் என்பது தான் இந்த பந்தய தடத்தை மேலும் சிறப்புமிக்கதாக ஆக்கியுள்ளது எனலாம்.

இரண்டு அடுக்கு பந்தய தடத்தில் 10 எலெக்ட்ரிக் கோ-கார்ட் கார்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பது விஷேசம்.

மேலும் கடலில் மிதந்தபடி கடல்காற்றை ரம்மியமாக அனுபவித்தவாறே கார் பந்தயத்தில் ஈடுபடும் வித்தியாசமான அனுபவத்தை இந்த பந்தய தடம் வழங்கும்.

ஜெர்மனியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ‘மேயர் வெர்ஃப்ட்' என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தினரால் இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

நார்வீஜியன் ஜாய் கப்பலில் மொத்தம் 3,850 பயணிகள் பயணிக்கலாம். முதலில் இதற்கு நார்வீஜியன் பிளிஸ் என்று தான் பெயரிட்டு இருந்தனர்.

எனினும் தற்போது இந்த சிறப்பு வாய்ந்த கப்பலின் பெயரை நார்வீஜியன் ஜாய் என மாற்றியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இந்த கப்பலின் கட்டுமானம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இருந்து ஷாங்காய் நோக்கி வரும் ஜூன் மாதம் 27-ல் இந்த கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது.

வழியில் துபாய் நாட்டிற்கு செல்லும் இக்கப்பல், பின்னர் சீனாவின் வடகிழக்கில் உள்ள முக்கிய துறைமுகமான டியான்சின் நகரில் நங்கூரம் இடப்பட உள்ளது.

பந்தய தடத்தை தவிர்த்து மேலும் பல சிறப்பு அம்சங்களை இந்த சொகுசுக் கப்பல் கொண்டிருக்கிறது.

மகிழ்சிகரமான அனுபவத்தை வழங்க இதில் பல விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

நம்ம ஊர் கிஷ்கிந்தா, எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ளது போன்று பல அடுக்குகள் கொண்ட நீர் சாகச விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு விஷயங்கள் இதில் உள்ளன.

நார்வீஜியன் ஜாய் கப்பலில் இடித்து விளையாடும் ஹோவர்கிராஃப்ட் பம்பர் கார்கள், சுவாரஸ்யத்தை வழங்கும் திறந்த வெளி லேசர் டேக் கோர்ஸ் ஆகியவை உள்ளன.

இதுவரை உல்லாசக் கப்பல்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஷாப்பிங் மால் இந்த கப்பலில் இருக்கிறது.

இந்தக் கப்பல் வாயிலாக நார்வீஜியன் க்ரூஸ் லைன்ஸ் நிறுவனம் சீன சந்தையில் முதல் முறையாக களமிறங்குகிறது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தில் தலைவரிடம் பேசியபோது, "தற்போது அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களைக் காட்டிலும் ஆசியாவில் அதிக அளவு பணக்காரர்கள் உருவாகி வருகின்றனர்"

"சீனாவை மட்டுமே கணக்கில் கொண்டால் அங்கு 387 பில்லியனர்களும் 10 லட்சத்திற்கும் அதிகமான மில்லியனர்களும் உள்ளனர்"

இதுவே ஆசியாவில் குறிப்பாக சீனாவில் எங்கள் நிறுவனம் களமிறங்க காரணம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கப்பலின் உள்ளே மட்டும் அல்லாது இயந்திரவியலிலும் புதிய தலைமுறை தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டதாக நார்வீயன் ஜாய் கப்பல் உள்ளது.

இதில் பிரம்மாண்டமான 5 மெயின் இஞ்சின்கள் உள்ளது. இதன் ஒட்டுமொத்த பவர் என்பது 1,02,900 ஹச்பி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நார்வீஜியன் ஜாய் கப்பல் குறித்து விளக்கும் காணொளியை மேலே காணுங்கள்..

English summary
Read in Tamil about world's first ship with race track built named norwegian joy.
Please Wait while comments are loading...

Latest Photos