இந்தியா வரும் உலகின் முதல் சோலார் விமானம்!

By Saravana

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத உலகின் முதல் சோலார் விமானம் வரும் மார்ச் மாதம் இந்தியா வர இருக்கிறது. ஆமதாபாத் மற்றும் வாரணாசியில் இந்த சோலார் விமானத்தை தரையிறக்குவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

சோலார் இம்பல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த விமானத்தை பகலில் மட்டுமின்றி, இரவிலும் இயக்கக்கூடியது. உலகை சுற்றி வரும் பயணத்தின் ஒருபகுதியாக இந்தியா வரும் இந்த விமானத்தின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


சுவிட்சர்லாந்து தயாரிப்பு

சுவிட்சர்லாந்து தயாரிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் இந்த சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானத்தை 10 ஆண்டுகால கடின உழைப்பில் தயாரித்துள்ளது. 150மில்லியன் டாலர் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு தனியார் முதலீட்டாளர்களின் உதவியுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமான தயாரிப்பு

விமான தயாரிப்பு

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விமானத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் விமான பொறியாளர் பெர்ட்ரான்ட் பிக்கார்டு. முதல்முறையாக பலூனில் பறந்து உலகை சுற்றி வந்தவர். இவர் ஆமதாபாத்தில் இருந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இருமுறை சந்தித்துள்ளதாகவும், சீதோஷ்ண நிலையை கருத்தில்கொண்டு இந்த ஆமதாபாத், வாரணாசி நகரங்களை தேர்வு செய்ததாகவும் பிக்கார்டு குறிப்பிட்டார்.

பெரிய டீம்

பெரிய டீம்

இந்த விமான வடிவமைப்புக்காக சுவிட்சர்லாந்து தொழிலதிபரும், விமான பைலட்டுமான ஆந்த்ரே போர்ச்ஸ்பெர்க் இணை நிறுவனமாக செயல்பட்டுள்ளார். இந்த திட்டத்தில் 80 நிபுணர்கள் மற்றும் 90 பார்ட்னர்களின் ஒத்துழைப்பில் தயாரித்துள்ளனர்.

 அபுதாபி டூ இந்தியா

அபுதாபி டூ இந்தியா

வரும் மார்ச் மாதம் அபுதாபியிலிருந்து அரபி கடல் வழியாக ஆமதாபாத் மற்றும் வாரணாசி நகரங்களுக்கு வருகிறது. இங்கிருந்து சீனா செல்கிறது. அதன் பின்னர் பசிபிக் பெருங்கடல் வழியாக அமெரிக்கா செல்ல உள்ளது. அதன்பிறகு ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவை தொட்டுவிட்டு மீண்டும் அபுதாபி வந்தடையும்.

 வெற்றிகரமான சோதனைகள்

வெற்றிகரமான சோதனைகள்

கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்து 26 மணிநேரம் இந்த விமானம் பறந்து சாதனை படைத்தது. இதில், இரவு நேரத்தில் 9 மணிநேரம் பறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாட்ரிட் நகரிலிருந்து பாபட் நகருக்கு 19 மணிநேரம் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பறந்து வெற்றியை பதிவு செய்தது. மேலும், சூரிய வெளிச்சம் இல்லாத இரவு நேரத்தில் தொடர்ந்து 9 மணிநேரம் பறந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரம்மாண்ட இறக்கைகள்

பிரம்மாண்ட இறக்கைகள்

இந்த சூரியசக்தி விமானத்தில் 12 ஆயிரம் சோலார் செல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதற்காக, 72 மீட்டர் நீளம் கொண்ட இறக்கை கொண்டது. இது 2,300 கிலோ எடையுடையது.

பறக்கும் திறன்

பறக்கும் திறன்

27,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் கடல் பகுதிகளில் மணிக்கு 90 கிமீ வேகத்திலும், பிற பகுதிகளில் மணிக்கு 140கிமீ வேகத்திலும் பறக்கும். இந்த விமானத்தில் ஒரேயொரு பைலட் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்.

பயன்பாடு

பயன்பாடு

இன்றைக்கு இது ஒரு விமானியை மட்டும் அமர்ந்து செல்லும் வசதி கொண்டதாக இருந்தாலும், இந்த தொழில்நுட்பம் எதிர்கால விமான தயாரிப்பு தொழில்நுட்பத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று சோலார் இம்பல்ஸ் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
English summary
Ahmedabad and Varanasi are set for a flying start. The cities will be ports of stop in India for a unique experiment that began in Switzerland — a round-the-world flight by the first aircraft run on solar power.
Story first published: Thursday, October 30, 2014, 12:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X