வியக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சத விமானம்!

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தை பிரிட்டனை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏர்லேண்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் பார்ப்பதற்கு பலூன் போன்றே காட்சியளிக்கிறது.

மிக பிரம்மாண்டமான இந்த விமானத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. மேலும், இதற்கு தனியாக ஓடுதளம் தேவையில்லை என்பதே மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக குறிப்பிடப்படுகிறது.


 ஏர்லேண்டர் எச்ஏவி304

ஏர்லேண்டர் எச்ஏவி304

ஏர்லேண்டர் எச்ஏவி304 என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட 300 அடி நீளம் கொண்ட இந்த ஆகாய கப்பல் அமெரிக்க ராணுவத்துக்காக பிரிட்டனை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால், கடந்த ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட்டில் 40 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த விமானத்தை வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் அந்த விமானம் திரும்ப ஹைபிரிட் வெகிக்கிள்ஸ் நிறுவனத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

உலகின் பெரிய விமானம்

உலகின் பெரிய விமானம்

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம்(240 அடி) மற்றும் அன்டோனோவ் ஏஎன்205(276 அடி) சரக்கு விமானத்தை காட்டிலும் இது நீளமானது. 300 அடி நீளம் கொண்ட இந்த ஆகாய கப்பலை எந்தவொரு இடத்திலும் ஹெலிகாப்டர் போன்றே தரையிறக்க முடியும். பிரத்யேக ஓடுதளம் தேவையில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தரையிறக்க முடியும் என்கின்றனர்.

உலகை வலம் வரும்

உலகை வலம் வரும்

வானில் தொடர்ந்து மூன்று வாரங்கள் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், ஒரே தடைவையில் தரையிறங்காமல் இரண்டு முறை உலகை வலம் வரும் ஆற்றல் கொண்டதாக குறிப்பிடுகின்றனர். இது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக குறிப்பிடுகின்றனர். நீர், நிலம் எங்கு வேண்டுமானாலும் தரையிறக்கலாம்.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

ஏர்லேண்டர் எச்ஏவி 304 ஆகாய கப்பலில் 20 டன் வரை எடை வரை ஏற்றிச் செல்லும். இதன் அடிப்படையில் புதிய ஏர்லேண்டர் 50 என்ற புதிய ஆகாய கப்பலை ஹைபிரிட் வெகிக்கிள்ஸ் நிறுவனம் வடிவமைத்து வருகிறது. அதில், 50 டன் வரை எடை ஏற்றலாம்.

அமைப்பு

அமைப்பு

விமானத்தின் கீழ் பாகத்தில் 2 விமானிகள் அமர்ந்து செல்வதற்கான காக்பிட் உள்ளது. அதனையொட்டிய பின்புறம் சரக்கு ஏற்றுவதற்கான பீம் கொடுக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

பெரிய அளவிலான தளவாடங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல உதவும். மேலும், இயற்கை சீற்றங்களின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இதனை பயன்படுத்தலாம் என்கிறது ஹைபிரிட் வெகிக்கிள்ஸ் நிறுவனம்.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

இது பிற விமானங்களை காட்டிலும் 70 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனம் கொண்டது. ஆம், இந்த விமானத்தை மேலே எழுப்புவதற்கு 60 சதவீதம் ஹீலியம் வாயுவும், 40 சதவீதம் டீசலும் பயன்படுகிறது. இதற்காக, இந்த விமானத்தில் 4 வி8 டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 வேகம்

வேகம்

பிற விமானங்களை போன்று அதிவேகத்தில் பறந்து செல்லாது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், இடைநில்லாமல் 3 வாரங்கள் வரை பறக்கும் வசதி கொண்டது.

 மதிப்பு

மதிப்பு

இது 40 மில்லியன் டாலரில் அமெரிக்க ராணுவத்துக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அமெரிக்க ராணுவம் திரும்ப வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துக்கு 2 பில்லியன் பவுண்ட் நிதி உதவியை வழங்கியுள்ளது. மேலும், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10 வீதம் ஏர்லேண்டர் விமானத்தை தயாரிக்க ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2016ல்...

2016ல்...

வரும் 2016ம் ஆண்டு பயணிகளுடன் ஏர்லேண்டர் விமானம் தனது முதல் பயணத்தை துவங்க உள்ளது. இது மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முதல் பயணத்தில் பிரபல நட்சத்திரங்களும் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபேஸ்புக்கில் படங்கள்

ஃபேஸ்புக்கில் படங்கள்

சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் 63 ஏஎம்ஜி சொகுசு எஸ்யூவியை டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதன் பிரத்யேக படங்களை எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம். விரைவில் இதன் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை வழங்குகிறோம்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X