துபாயிலுள்ள, உலகின் மிகப்பெரிய ஆட்டோமேட்டிக் கார் பார்க்கிங் டவர்!!

வணிக வளாகங்கள் அல்லது நெரிசல் மிகுந்த பகுதிகளில், பார்க்கிங் செய்வது மிகப்பெரிய கார் உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலி தரும் விஷயம். சில வணிக வளாகங்களில் மிக நெருக்கடியாக அமைக்கப்பட்டிருக்கும் பார்க்கிங் பகுதியில் காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவது சர்க்கஸ் செய்வதற்கு நிகராக உள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது ஆட்டோமேட்டிக் கார் பார்க்கிங் சிஸ்டம் கொண்ட பார்க்கிங் லாட்டுகள் அமைக்கப்படுகிறது.

அதில், உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமேட்டிக் கார் பார்க்கிங் லாட் என்ற பெருமையை, துபாயிலுள்ள எமிரேட்ஸ் பைனான்சியல் டவர்ஸில் அமைந்திருக்கும் கார் பார்க்கிங் பகுதி பெற்றிருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்த ஆட்டோமேட்டிக் கார் பார்க்கிங் டவர் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 அடுக்குமாடி பார்க்கிங் லாட்

அடுக்குமாடி பார்க்கிங் லாட்

துபாயிலுள்ள எமிரேட்ஸ் பைனான்சியல் பார்க்கிங் டவரில்தான் இந்த கார் பார்க்கிங் பகுதி அமைந்துள்ளது. பூமிக்கு கீழே நான்கு தளங்களையும், தரை தளம் மற்றும் பூமிக்கு மேலே 4 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இது 35.5 மீட்டருக்கு 98 மீட்டர் என்ற அளவிலான அகலும், 22.5 மீட்டர் உயரமும் கொண்டது.

குறைவான இடத்தில் அதிக கார்கள்

குறைவான இடத்தில் அதிக கார்கள்

சாதாரண பார்க்கிங் லாட்டுகளைவிட குறைவான இடத்தில் அதிக கார்களை நிறுத்துவதற்கு இந்த ஆட்டோமேட்டிக் பார்க்கிங் லாட்டுகள் உதவி புரிகின்றன. காரை வாயிலில் விட்டு விட்டு உரிமையாளர் தங்களது வேலையை பார்க்க சென்றுவிடலாம். பார்க்கிங் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால் நேரம் மிச்சமாகும்.

கார் நீளம்

கார் நீளம்

இந்த பார்க்கிங் வளாகத்தில் அதிகபட்சமாக 5,791 மிமீ (19 அடி) நீளமும், 2,133 மிமீ (7 அடி) அகலமும் கொண்ட காரை நிறுத்த முடியும். எனவே, சொகுசு கார் வைத்திருப்பவர்கள் கூட கவலைப்படாமல் இந்த பார்க்கிங் லாட்டுக்கு செல்லலாம்.

அதிவேகம்

அதிவேகம்

மேலும், கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் கார்களை கொண்டு செல்வதும், திரும்பி எடுத்து வருவதும் மிக விரைவாக நடக்கும். இதில் உள்ள மின்தூக்கிகள் ஒரு வினாடிக்கு 1.25 மீட்டர் வேகத்தில் இயங்கும். இதனால், காருக்கு உரிமையாளர்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

 காலி இடம்

காலி இடம்

பார்க்கிங் மேடைகளில் எங்கு காலி இடம் இருக்கிறது என்பதை கம்ப்யூட்டர் தெரிந்துகொண்டு விரைவாக அந்த இடத்திற்கு காரை கொண்டு செல்லவும், திரும்ப எடுத்து வருவது என அனைத்தும் மிக விரைவாக நடக்கும்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

காரை மின்தூக்கியில் நிறுத்தியவுடனே, ஹேண்ட்பிரேக்கை போடுவதற்கும், சரியான கோணத்தில் நிறுத்துவதற்கும் எச்சரிக்கை வாசகங்கள் எதிரே உள்ள மின்னணு திரையில் காண்பிக்கிறது. இதன்மூலம், சரியாக காரை மின்தூக்கியில் நிறுத்த முடியும்.

கையாளும் திறன்

கையாளும் திறன்

ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 1,191 கார்களை இந்த பார்க்கிங் டவரில் நிறுத்த முடியும். ஒரே நேரத்தில் 360 கார்களை தானியங்கி முறையில் இந்த கம்ப்யூட்டர் மூலமாக ஏற்றி, இறக்க முடியும். இது இரட்டை கோபுரங்களை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், பல வணிக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

பாதிப்பு ஏற்படாது...

பாதிப்பு ஏற்படாது...

உரிமையாளர்கள் அல்லது வாலே பார்க்கிங் டிரைவர்கள் மூலமாக நெருக்கடியான இடங்களில் பார்க்கிங் செய்யும்போது காரில் சேதம் ஏற்படுவதுண்டு. ஆனால், இந்த முறை பார்க்கிங்கில் காரில் எந்த சேதமும் ஏற்படாது.

டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் சிஸ்டம்

டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் சிஸ்டம்

இந்தியாவிலும் அதிகரித்து வரும் வாகன நெருக்கடியை கருதி, தானியங்கி கார் நிறுத்தும் வசதியுடன் கூடிய அடுக்குமாடி பார்க்கி்ங் லாட்டுகளை அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, சரோஜினி நகர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் சவுத் ஸ்கோயர் என்ற ஆட்டோமேட்டிக் பார்க்கிங் சிஸ்டம் அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் லாட்டில் ஒரே நேரத்தில் 824 கார்களை நிறுத்த முடியும். 24 மணிநேரமும் இது செயல்படுவதால் வாகன உரிமையாளர்களுக்கு பிரச்னை இல்லை. இதன் 2வது தளத்திலிருந்து 8வது தளம் வரை கார்களை நிறுத்த முடியும். ரூ.80 கோடி திட்ட மதிப்பீட்டில் இது கட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Emirates Financial Towers proudly features the world’s largest automated parking system. Utilizing a revolutionary approach which enables up to 1,191 vehicles to be fully parked by the computerized parking management system, the facility has been designed to more than meet the needs of tenants and visitors alike.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X