210 அடி உயரத்தில் கடலில் பிரம்மாண்டமாய் காட்சி தந்த உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்!

By Saravana

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் தனது முதல் சோதனை ஓட்டத்தை நேற்று துவங்கியது. இந்த பிரம்மாண்ட கப்பல் செல்வதை காண்பதற்கு, பிரான்ஸ் நாட்டின் செயின்ட் நசைர் துறைமுகத்தின் அருகில் ஆயிரக்கணக்கானோர் கேமராவும், கையுமாக குவிந்தனர்.

இழுவை கப்பல்கள் மூலம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த கப்பலை காணும்போதே, அதன் பிரம்மாண்டத்திலும், மிதந்து செல்லும் அழகிலும் மனது லயித்துப் போகிறது. அந்த பிரம்மிப்பையும், உன்னதானமான உணர்வையும் வாசகர்களும் பருக வேண்டும் என்ற நோக்கில் இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

பிரான்ஸ் தயாரிப்பு

பிரான்ஸ் தயாரிப்பு

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் நசைரை சேர்ந்த எஸ்டிஎக்ஸ் என்ற கப்பல் கட்டும் தளத்தில் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்களை வைத்து சேவை வழங்கி வரும் ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டது. இதுதான் உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையை பெறுகிறது.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

டெலிவிரி கொடுக்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், இந்த கப்பலின் சோதனை ஓட்டங்கள் துவங்கியிருக்கிறது. முதல் சோதனை ஓட்டம் துவங்குவதை காண்பதற்காக செயின்ட் நசைர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடற்கரையில் பகுதிகளில் குவிந்தனர். இந்த கப்பலில் ராயல் கரிபீயன் நிறுவனத்தின் கண்காணிப்பு குழுவினர், எஸ்டிஎக்ஸ் கப்பல் கட்டும் தளத்தின் ஊழியர்கள், சப்ளையர்கள் என 500 பேர் பயணித்தனர்.

இழுவை படகுகள் உதவி

இழுவை படகுகள் உதவி

செயின்ட் நசைர் துறைமுகத்திலிருந்து கப்பலை நடுக்கடலுக்கு கொண்டு செல்வதற்காக 6 இழுவைப் படகுகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், அங்கிருந்து நடுக்கடலுக்கு கொண்டு செல்வதற்கு சில இடங்களில் கப்பலை திருப்ப வேண்டியிருந்தது. அதனையும் மாலுமிகள் திறமையாக கையாண்டனர். கடலில் 20 கிமீ தூரத்திற்கு அப்பால், இழுவை படகுகளின் உதவியில்லாமல் கப்பல் செலுத்தப்பட்டது.

மீண்டும் சோதனை

மீண்டும் சோதனை

அடுத்த மாதம் இரண்டாவது சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின்னர், மே 12ந் தேதி ராயல் கரிபீயன் நிறுவனத்திடம் இந்த கப்பல் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது.

மதிப்பு

மதிப்பு

இந்த கப்பல் 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பல் 1.20 லட்சம் டன் வெற்று எடையும், 362 மீட்டர் நீளமும் கொண்டது. 16 அடுக்குகளை கொண்ட இந்த பயணிகள் கப்பல் ஏற்கனவே இருந்த சொகுசு கப்பல்களையெல்லாம் வடிவத்தில் விஞ்சி நிற்கிறது.

ஓர் ஆண்டு பயிற்சி

ஓர் ஆண்டு பயிற்சி

இந்த பிரம்மாண்ட கப்பலை இயக்குவதற்கு 3 கேப்டன்களுக்கு கடந்த ஓர் ஆண்டாக பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. சிமுலேட்டர் மூலமாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, இவ்வளவு பிரம்மாண்டமான கப்பலை திருப்புவதற்கு மிகச் சிறப்பான பயிற்சியையும், கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி மிக விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

 பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலில் 6,360 பயணிகளும், 2,100 கப்பல் பணியாளர்களும் பயணிக்கலாம்.

முதல் வர்த்தக பயணம்

முதல் வர்த்தக பயணம்

வரும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் சவுதம்டன் நகரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு முதல் பயணத்தை துவங்க இருக்கிறது ஹார்மோனி ஆஃப் தி சீஸ் சொகுசு கப்பல்.

Source

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Harmony of the Seas, the world’s largest cruise ship, set off on Thursday on its first sea trial from Saint-Nazaire, western France, with just two months to go to delivery.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X