உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி படகு - சிறப்புத் தகவல்கள்!

By Saravana

பூமியிலிருந்து கிடைக்கும் மரபுசார் எரிபொருளை வேகமாக தீர்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்து இருக்கும் மாற்று எரிபொருளுக்கான அட்சய பாத்திரம் சூரிய பகவான்தான். ஆம், சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி இயங்கும் வாகனங்கள்தான் எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும் என்று கருதப்படுகிறது.

சுற்றுச்சூழல் கேட்டை தவிர்ப்பதுடன், மின் ஆற்றலை எளிதாக பெறும் உபாயமாக சூரிய மின்சக்தி இருக்கிறது. எனவே, சூரிய மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டுகின்றனர். அதுபோன்று, தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி படகு பற்றிய சில முக்கியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாநெட் சோலார்

பிளாநெட் சோலார்

உலகின் இந்த பிரம்மாண்ட சூரிய மின்சக்தி படகுக்கு பிளாநெட் சோலார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எல்ஓஎம் ஓசேன் நிறுவனம் வடிவமைத்தது. ஜெர்மனியை சேர்ந்த நீரிம் யாட்பாவ் நிறுவனம் கட்டிக் கொடுத்தது.

வடிவம்

வடிவம்

85 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த படகின் மேற்புறத்தில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த படகு 101 அடி நீளமும், 49 அடி அகலமும் உடையது.

 மின் மோட்டார்கள்

மின் மோட்டார்கள்

இந்த படகில் 2 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மின் மோட்டார் 13.41 எச்பி சக்தியை வழங்க வல்லது.

வேகம்

வேகம்

மணிக்கு அதிகபட்சமாக 26 கிமீ வேகத்தில் கடலில் பயணிக்கும்.

 மதிப்பு

மதிப்பு

இந்த ஆடம்பர படகு 15 மில்லியன் யூரோ விலை மதிப்புடையது.

உலக சுற்றுப் பயணம்

உலக சுற்றுப் பயணம்

கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி மொனாக்கோவிலிருந்து தனது உலகம் சுற்றும் பயணத்தை பிளாநெட் சோலார் படகு தொடங்கியது. முழுக்க முழுக்க சூரிய மின்சக்தி மூலம் உலகை சுற்றி வந்தது. மறுசுழற்சி எரிபொருள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

சாதனை

சாதனை

பல்வேறு நாடுகள் வழியாக 2012ம் ஆண்டு மேமாதம் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது பிளாநெட் சோலார். இந்த படகில் 6 பேர் பயணித்தனர்.584 நாட்களில் உலகை சுற்றி வந்தது இந்த படகு. உலகை சுற்றி வந்த முதல் சூரிய மின்சக்தி படகு என்ற பெருமையையும் பிளாநெட் சோலார் பெற்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The PlanetSolar, world's Largest solar-powered boat, measures 31 m (101 ft) long – or 35 m (114 ft) with flaps extended.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X