வியக்க வைக்கும் உலகின் அதிசிறந்த கார் கராஜ்கள்: சிறப்புத் தொகுப்பு

By Saravana

சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கார்களை நிறுத்துவதற்கான இடவசதியுடன் போர்ட்டிகோ அமைப்பது வழக்கம். வசதி படைத்தவர்கள் ஏழெட்டு கார்கள் வரை பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்குமாக கார் கராஜ்களை அமைக்கின்றனர்.

ஆனால், இந்த செய்தித் தொகுப்பில் காணப் போகும் கராஜ்களின் சொர்க்கபுரியாக இருக்கின்றன. அவற்றின் அந்தஸ்தை வெளிப்படுத்தும் இடமாகவும் இருக்கும் உலகின் மிகவும் விசேஷமான கார் கராஜ்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. ஆட்டோமோட்டார் ப்ளக்ஸ், அமெரிக்கா

01. ஆட்டோமோட்டார் ப்ளக்ஸ், அமெரிக்கா

அமெரிக்காவின் 14வது பெரிய பெருநகரமான மின்னியாபொலிஸில் இருக்கும் ஆட்டோமோட்டார் ப்ளக்ஸ் கராஜ் மிகவும் பிரம்மாண்டமானது. இதில், உலகின் விலைமதிப்புமிக்க பாரம்பரிய கார்கள் மற்றும் உயர்வகை கார்களை கார் சேகரிப்பாளர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் மையமாக செயல்படுகிறது. ஆட்டோமோட்டார் ப்ளக்ஸில் மொத்தம் 146 கார் கராஜ்கள் உள்ளன. இந்த கராஜில் 120க்கும் அதிகமான கார் சேகரிப்பாளர்களின் ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் இங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

02. டி-போன் ஹவுஸ் ஸ்டட்கர்ட், ஜெர்மனி

02. டி-போன் ஹவுஸ் ஸ்டட்கர்ட், ஜெர்மனி

ஆங்கில எழுத்தான T போன்று இந்த கராஜின் கட்டடம் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த பெயர் பெற்றிருக்கிறது. போர்ஷே கார்களின் சொகுசு இல்லமாக இதனை கூறலாம். ஜெர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் நகரில் இந்த கராஜ் அமைந்திருக்கிறது.

03. ஸ்கூபர்ட் ஹவுஸ், அமெரிக்கா

03. ஸ்கூபர்ட் ஹவுஸ், அமெரிக்கா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் இந்த ஸ்கூபர்ட் ஹவுஸ் கார் கராஜ் அமைந்திருக்கிறது. ஹோல்ட்கர் ஸ்கூபர்ட் என்பவர் தனது 1984ம் ஆண்டு ஃபெராரி 512 பிபிஐ பாக்ஸர் கார் மீது இருந்த பிரியத்தின்பேரில் உருவான கராஜ் இது. அதாவது, அவரது வீட்டில் நடுநாயகமாக தனது கண்ணில் எப்போதும் படும் படி இந்த காருக்கான இடத்தை அமைத்து கட்டடத்தை கட்டியுள்ளார்.

04. ஆஷ்லி ரோடு, சான்டா பார்பரா, அமெரிக்கா

04. ஆஷ்லி ரோடு, சான்டா பார்பரா, அமெரிக்கா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகர் வாழ் மக்களின் கார் கலாச்சாரத்தை பரைசாற்றும் மற்றொரு கராஜ் இது. மிகப்பெரிய கண்ணாடி கார் கராஜுடன் அமைக்கப்பட்ட இந்த 5 படுக்கையறைகள் கொண்ட வீடு 12.9 மில்லியன் டாலர்களுக்கு சில ஆண்டுகளுக்கு விற்பனையானது.

05. வெஸ்ட் பெலிவியூ, அமெரிக்கா

05. வெஸ்ட் பெலிவியூ, அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்திருக்கும் மிகப்பெரிய கார் கராஜ்களில் ஒன்றுதான் வெஸ்ட் பெலிவியூ. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் மேற்பகுதியில் இந்த கார் கராஜ் அமைக்கப்பட்டிருக்கிறது. கார்களை மேலை, கீழே எடுத்துச் செல்வதற்கு லிஃப்ட் வசதி உள்ளது.

06. கேஆர்இ ஹவுஸ், ஜப்பான்

06. கேஆர்இ ஹவுஸ், ஜப்பான்

ஜப்பான் நாட்டுத் தலைநகர் டோக்கியோவில் அமைந்திருக்கும் இந்த கார் கராஜ் வீட்டின் நிலவரையில் அமைக்கப்பட்டிருக்கிறது. கார்களை கீழே கொண்டு செல்வதற்கு மின்தூக்கி உண்டு. இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா, வேண்டும்போது உங்களுக்கு விருப்பமான காரை வரவேற்பு அறைக்கு கொண்டு வந்து நிறுத்துவதற்கான வசதியுடன் இந்த வீடும், கராஜும் கட்டப்பட்டிருக்கிறது. 5 டிசைனர்கள் இணைந்து இந்த கார் கராஜை வடிவமைத்தனர்.

07. மார்பெல்லா, ஸ்பெயின்

07. மார்பெல்லா, ஸ்பெயின்

இரண்டே கார்கள் நிறுத்துவதற்கான கராஜ்தான். ஆனால், மிகவும் சிறப்பானகவும், அழகிய மின்னொளியிலும் இந்த கார் கராஜ் கவர்கிறது. ஒன்றிரண்டு கார்களை வைத்திருப்பவர்களுக்கு பயன்படும் வகையல் இதனை சேர்த்திருக்கிறோம்.

08. ஹொக்கய்டோ, ஜப்பான்

08. ஹொக்கய்டோ, ஜப்பான்

நவீன வடிவமைப்பு கட்டட கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் கராஜ் ஜப்பானிலுள்ள ஹொக்கய்டோ நகரில் உள்ளது. காரை பார்த்துக் கொண்டே இருப்பதற்கு வசதியாக, படுக்கையறையும், பால்கனியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கார் மீது எவ்வளவு பிரிமியம் இருந்தால் இது சாத்தியம் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

09. டிஆர் பில்டிங், அமெரிக்கா

09. டிஆர் பில்டிங், அமெரிக்கா

நியூ இங்கிலாந்து என்று அழைக்கப்படும் அமெரிக்காவிலுள்ள கனெக்டிகட் நகரில் அமைந்திருக்கும் இந்த கார் கராஜின் மதிப்பு 1 மில்லியன் டாலர்கள். உட்புறம் முழுவதும் பைன் மரத்தால் இழைக்கப்பட்டுள்ளது.மின்தூக்கி மூலம் உள்ள கார்கள் கொண்டு வரப்படுகின்றன.

10. ஹாமில்டன் ஸ்காட்ஸ் ரிங்வுட், சிங்கப்பூர்

10. ஹாமில்டன் ஸ்காட்ஸ் ரிங்வுட், சிங்கப்பூர்

சிறிய நிலப்பரப்பு கொண்ட சிங்கப்பூரில் கார்களை வாங்குவது ஒருபுறம் இருந்தாலும், பார்க்கிங் பிரச்னை அதிகம். இந்த நிலையில், ஹாமில்டன் ஸ்காட்ஸ் ஹை ரைஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் காரை தனது வீட்டிற்குள் நிறுத்திக் கொள்ளும் வசதியுடன் கட்டப்பட்டிருக்கிறது. மின்தூக்கி மூலம் அவரவர் வீட்டிற்குள் கார் வந்துவிடும்.

11. இதுவும் சூப்பரு...

11. இதுவும் சூப்பரு...

சாலையின் இறக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டிற்கு தகுந்தாற்போல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைக்கப்பட்டிருக்கும் கார் கராஜ். மின்தூக்கி மூலம் மூன்று கார்களை சாலையிலிருந்து வீட்டிற்கு நேராக நிறுத்தி வைக்க முடியும். கென்ஜி யனகவா என்பவர் இந்த கார் கராஜ் முறையை வடிவமைத்தார்.

12. பாயிண்ட் துமே, அமெரிக்கா

12. பாயிண்ட் துமே, அமெரிக்கா

அமெரிக்காவின், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மாலிபுவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் கராஜ் ஓர் கார்களுக்கான அருங்காட்சியமாக விளங்குகிறது. 7,002 சதர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மியூசியத்தில் பாரம்பரியமிக்க உயர்வகை கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

13. ஜெர்ரி செயின்ஃபெல்ட்ஸ் கராஜ், அமெரிக்கா

13. ஜெர்ரி செயின்ஃபெல்ட்ஸ் கராஜ், அமெரிக்கா

அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரில் அமைந்திருக்கும் இந்த கார் கராஜ் ஜெர்ரி செயின்ஃபெல்ட்க்கு சொந்தமானது. போர்ஷே கார்களுக்கான பிரத்யேகமான கார் கராஜ் என்பதுடன், இதில் 15 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்ட போர்ஷே கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

14. ஹில்க்ரெஸ்ட் ரோடு, அமெரிக்கா

14. ஹில்க்ரெஸ்ட் ரோடு, அமெரிக்கா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் சொகுசு இல்லங்களில் கார்களை வரவேற்பு அறையில் நிறுத்தி வைக்கும் வசதி உள்ளது. ஒரு வீட்டின் விலை 85 மில்லியன் டாலர்கள்.

15. கராஜ்நேட்லியர், சுவிட்சர்லாந்து

15. கராஜ்நேட்லியர், சுவிட்சர்லாந்து

மாடங்களில் கார்களை நிறுத்தி இருக்கும் அழகு சூப்பர். மிகவும் பிரத்யேகமானதாக தெரியும் இந்த கார் கராஜை பிரபல கட்டட கலை நிபுணர் பீட்டல் குன்ஸ் வடிவமைத்துள்ளார். புல்தரைகள், மரங்கள், பூந்தோட்டங்களுக்கு மத்தியில் மிகவும் ரம்மியமானதாக இதனை உருவாக்கியுள்ளார் அவர். சப்தமில்லாத அமைதியான சூழலில் நிற்கும் கார்களை பார்க்க அற்புதமான உணர்வை தருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are 15 garages from all corners of the world that will blow your mind.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X