உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் சாங்கி தேர்வு!

By Saravana

இந்த ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இந்த பெருமையை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை சியோல் இன்சியோன் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தை மூனிச் விமான நிலையமும் பெற்றுள்ளன.

இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் உலகின் சிறந்த விமான நிலையங்கள் குறித்து விமான பயணிகளிடம் ஆய்வு நடத்தி இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 410 சர்வதேச விமான நிலையங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விமான முனையத்தின் பராமரிப்பு, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கணக்கில்கொண்டு இந்த ஆய்வை நடத்தி உலகின் சிறந்த விமான நிலையங்களை ஸ்கைட்ராக்ஸ் அறிவித்து வருகிறது.

உலகின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் சிறப்புகளை முதல் மூன்று ஸ்லைடுகளிலும், அடுத்தடுத்த இடத்தை பிடித்த விமான நிலையங்களின் தகவல்களை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

நம்பர்- 1 சிங்கப்பூர்

நம்பர்- 1 சிங்கப்பூர்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் மூன்று முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 66 மில்லியன் பயணிகள் வரை பயன்படுத்தும் வசதிகள் கொண்டது.

பொழுதுபோக்கு வசதிகள்

பொழுதுபோக்கு வசதிகள்

சிறந்த பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்த விமான நிலையம் என்ற பெருமையையும் சிங்கப்பூர் சாங்கி பெற்றுள்ளது. இந்த விமான நிலையத்தின் 2வது மற்றும் 3வது முனையத்தில் திரையரங்குகளும், 2வது முனையத்தில் பூங்காவும், முதல் முனையத்தில் உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம் மற்றும் ஓட்டல்கள் உள்ளன.

 4வது முனையம் - சிங்கப்பூர்

4வது முனையம் - சிங்கப்பூர்

கடந்த ஆண்டு நான்காவதாக புதிய முனையத்தை அமைக்கப் போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்தது. 2017ல் பயன்பாட்டுக்கு வரும் இந்த முனையத்தின் மூலம் 16 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் தாய்லாந்து சுவர்ணபூமி விமான நிலையங்களால் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு கடும் போட்டி இருக்கிறது. எனவே, 5வது முனையத்தை அமைக்கவும் சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளது. இது தற்போதைய விமான நிலையத்தைவிட பெரிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பர்- 2 சியோல்

நம்பர்- 2 சியோல்

தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையம் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 39.2 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் வசதி கொண்டது. 70க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன. 2005ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கொரியாவின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் சுகாதாரம், உணவு வகைகளுக்கு பெயர் போனது.

 நம்பர்- 3 மூனிச் விமான நிலையம்

நம்பர்- 3 மூனிச் விமான நிலையம்

உலகின் இரண்டாவது பரபரப்பு மிகுந்த விமான நிலையம் ஜெர்மனியில் உள்ள மூனிச் விமான நிலையமாகும். ஆண்டுக்கு 37.8 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்த விமான நிலையத்தின் உள்ளலங்கார வேலைப்பாடுகள் பார்ப்போரை பிரமிக்க வைக்கும். உணவு மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு சிறந்த ஐரோப்பிய விமான நிலையம் என்ற பெருமை கொண்டது.

 ஹாங்காங் விமான நிலையம்

ஹாங்காங் விமான நிலையம்

சீனாவின் சிறப்பு அந்தஸ்து கொண்ட சிறந்த சுற்றுலா நகரமான ஹாங்காங்கில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம், ஆண்டுக்கு 53.3 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் வசதி கொண்டது. இந்த விமான நிலையமும் உலகின் பரபரப்பு மிகுந்த விமான நிலையங்களில் ஒன்று. சுகாதாரம் மற்றும் பொருட்களை கையாள்வதில் சிறந்த விமான நிலையமாக பெயர்பெற்றது. ஷாப்பிங் செய்வதற்கும் ஏற்ற விமான நிலையமாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த விமான நிலையத்தில் கோல்ஃப் மைதானம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையங்களும் உள்ளன.

 ஆம்ஸ்டர்டாம்

ஆம்ஸ்டர்டாம்

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையத்தை ஆண்டுக்கு 49.8 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். 1916ம் ஆண்டில் ராணுவ விமான தளமாக உருவாகி இன்று வர்த்தக விமான நிலையமாக மாறியுள்ளது. உலகின் அதிக பரபரப்பு கொண்ட விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. மசாக் கிளப், சூதாட்ட விடுதிகள், நூலகம் ஆகியவை பயணிகளை கவர்ந்த ஒன்று. மேலும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிரம்ப பெற்றிருக்கிறது.

டோக்கியோ விமான நிலையம்

டோக்கியோ விமான நிலையம்

ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம், ஆண்டுக்கு 62.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் வசதிகொண்டது. இது மூன்று முனையங்களை கொண்டது. ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகள் வந்துசெல்வதற்கான வசதியை பெற்றிருக்கிறது. பாதுகாப்பு, சுத்தம் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு இந்த விமான நிலையம் பிரபலமாக இருக்கிறது.

பீஜிங் விமான நிலையம்

பீஜிங் விமான நிலையம்

உலகின் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றான சீனத் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 78.7 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் கட்டமைப்பு வசதிகளை உடையது. ஆசியாவின் இரண்டாவது பரபரப்பு மிக்க விமான நிலையம் இது. இங்கு நியூயார்க் விமான நிலையத்தை விட பெரிதாக ஒரு விமான நிலையம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது திறக்கப்பட்ட இதன் மூன்றாவது விமான முனையம் உலகின் 8வது சிறந்த விமான முனையமாக பெருமை பெற்றது. இதில் அமைந்திருக்கும் ஓட்டல் உலகின் இரண்டாவது சிறந்த ஓட்டலாக விருது பெற்றுள்ளது.

ஸூரிச் விமான நிலையம்

ஸூரிச் விமான நிலையம்

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப்பூமியாக கூறப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள ஸூரிச் விமான நிலையம் பாதுகாப்புக்கு பெயர் பெற்றது. இந்த விமான நிலையத்தில் இருக்கும் தானியங்கி சுரங்க ரயில் சேவையும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஒன்று. இந்த விமான நிலையத்தில் பொருட்களை வீட்டிற்கோ அல்லது குறிப்பிடும் இடத்திற்கே வந்து டெலிவிரி கொடுக்கும் வசதியும் இருக்கிறது. ஆண்டுக்கு 24.8 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

வான்கூவர் விமான நிலையம்

வான்கூவர் விமான நிலையம்

ஆண்டுக்கு 18 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் வான்கூவர் விமான நிலையம் பரபரப்பு மிகுந்த டாப்-10 விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது. வட அமெரிக்காவின் சிறந்த விமான நிலையமாகவும் விருது பெற்றிருக்கிறது. பயணிகளை சேருமிடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கும், தகவல்களை அளிப்பதற்கும் தன்னார்வலர்கள் இங்கு சேவை புரிகின்றனர்.

லண்டன் ஹீத்ரூ

லண்டன் ஹீத்ரூ

ஆண்டுக்கு 69.4 பயணிகள் வந்து செல்லும் லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையம், 2011ல் உலகின் மூன்றாவது பரபரப்புமிக்க விமான நிலையமாக பெயர் பெற்றது. இந்த விமான நிலையத்தின் 5வது முனையம் ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற இடமாக விருது பெற்றது. பயணிகள் பயன்படுத்துவதற்கு எளிதாகவும், பொது போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்கான 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற விமான நிலையமாக ஸ்கைட்ராக்ஸ் அறிவித்தது.

Most Read Articles
Story first published: Saturday, March 29, 2014, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X