புரோமோஷன்களுக்கு ஓகே... நடைமுறைக்கு ஒத்துவராத கார் கலர்கள்!!

By Saravana

காரின் வெளிப்புறத் தோற்றத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது அதன் வண்ணம்தான். இதனாலேயே, கார் வாங்கும்போது அதன் வண்ணத்தை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், சில முன்னணி கார்களுக்கு பொருத்தமில்லாத வண்ணங்களை கார் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. மேலும், அவைதான் அந்த கார்களை பிரபலப்படுத்தும்போது விளம்பரங்களில் அதிகம் பயன்படுத்துகின்றன. ஆனால், உண்மையை ஆராய்ந்து பார்த்தால் அந்த வண்ணங்களை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் விரும்புவதில்லை என்பது தெரிய வருகிறது.

டட்சன் கோ

டட்சன் கோ

டட்சன் கோ காரை பிரபலப்படுத்துவதற்கு வெளிர் நீல வண்ணத்தையே பயன்படுத்தினர். படங்களில் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், நேரடியாக பார்க்கும்போது இது காருக்கு பொருத்தமானதாக இல்லை. இதனால், பல வாடிக்கையாளர்கள் பிற வண்ணங்களை தேர்வு செய்கின்றனர்.

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் பழுப்பு, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் நன்றாக பொருந்திப் போகின்றன. அதேவேளை, இந்த டோரிடர் ரெட் என்ற வண்ணம் அதற்கு பொருத்தமானதாக இல்லை. எனவே, இந்த வண்ணத்தை வாடிக்கையாளர்கள் தள்ளியே வைத்துள்ளனர்.

 டாடா நானோ

டாடா நானோ

ரொமான்டிக் கலராக நினைத்து இதனை டாடா நானோவிற்கு டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. பெர்சியன் ரோஸ் என்று அழைக்கப்படும் வண்ணம், இந்த காருக்கு தூக்கி அடிக்கிறது. பொருந்தி போகவில்லை. பெண் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வழங்கினாலும், வெளியில் எடுத்துச் செல்லும்போது அவர்களுக்கு சங்கோஜத்தை தரும் என்பதால் இதற்கும் வரவேற்பு அதிகமிருக்காது.

 நிசான் எவாலியா

நிசான் எவாலியா

நிசான் எவாலியாவின் புரொமோஷன்களுக்கு இந்த வண்ணம்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இது ஒரு டல் மாடலாக நிசான் எவாலியாவை காட்டுகிறது. மேலும், நாள்பட்ட புழக்கத்திற்கு இந்த கலர் எவாலியாவை பழைய கார் போன்று காட்டுவதால், இதனையும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதில்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சன்செட் ஆரஞ்ச் என்ற வண்ணம்தான் புரோமோஷன்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த வண்ணம் அந்த காருக்கு பொருத்தமானதாக இல்லை. நடைமுறைக்கு இந்த கலர் பலரை கவராது என்றே கூறலாம்.

மாருதி சுஸுகி டிசையர்

மாருதி சுஸுகி டிசையர்

டாடா நானோ, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஆகியவற்றின் புதிய மாடல்களில் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய வண்ணங்கள்தான் முகம் சுளிக்க வைக்கின்றன. அல்லது பொருத்தமில்லாதவையாக இருக்கின்றன. அந்த வரிசையில், இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆல்ப் புளூ என்ற வண்ணம், அந்த காரை ரீபெயிண்ட் செய்த கார் போன்று காட்டுகிறது. அத்துடன், ஹோண்டா அமேஸுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய பழுப்பும், சிவப்பும் கலந்த வண்ணமும் சிறப்பாக இல்லை. அதற்கு பழைய சிகப்பு வண்ணமே தேவலாம் போலிருக்கிறது.

 ஃபோர்ஸ் குர்கா

ஃபோர்ஸ் குர்கா

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவிக்கு டிராகன் க்ரீன் என்ற வண்ணம் அதற்கு ஒத்துப் போகவில்லை. எனவே, இந்த வண்ணத்தை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை. இதுவும் புரொமோஷன்களுக்கு அதிகம் பயன்படுத்த வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 நடைமுறைக்கு ஒத்து வராது

நடைமுறைக்கு ஒத்து வராது

இந்த செய்தித் தொகுப்பில் பார்த்த வண்ணங்கள் போட்டோஷூட் மற்றும் பிரத்யேக கோணங்களில் வைத்து எடுக்கப்படும் வீடியோவிற்கு ஓகேதான். ஆனால், இந்த வண்ணங்களை நடைமுறையில் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதே உண்மை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sometimes, looking at a colour, on could think—what was the manufacturer thinking? In our list of 7 Indian cars with the worst colours money can buy, we take a look at cars that look like aliens with skin pigmentation disorders to Dragon Green SUVs!
Story first published: Wednesday, June 3, 2015, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X