இசிஆர் சாலையில் பயங்கர விபத்து... கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!

கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். சாலை விதியை மீறியதும், அதிவேகமும் விபத்துக்கு காரணங்களாக தெரிய வந்துள்ளது.

Written By:

கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று நடந்த பயங்கர சாலை விபத்து நடந்தது. சாலையின் எதிர்திசையில் கேடிஎம் ட்யூக் பைக்கில் இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக வந்தனர். அப்போது, அங்கிருந்த சாலை சந்திப்பில் வந்த மற்றொரு பைக்குடன் கேடிஎம் ட்யூக் பைக் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தது.

அப்போது, கேடிஎம் ட்யூக் பைக்கை ஓட்டி வந்தவரும், பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் வேகமாக வந்த அரசு பேருந்து கீழே விழுந்தவர்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.

இதில், சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கேடிஎம் ட்யூக் பைக்கில் வந்தவர்கள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரை சேர்ந்த சஜின் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் என தெரிய வந்தது.

இந்த நிலையில், இந்த கோர விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், கண்ணுக்கு தெரிந்து சாலை விதிகளை மீறியதால்தான், தங்களது உயிரை அந்த இளைஞர்கள் இழந்திருப்பது தெரிய வருகிறது. கேடிஎம் ட்யூக் பைக்கை ஓட்டி வந்த சஜின், சாலையின் எதிர்திசையில் அதிவேகமாக பைக்கை ஓட்டி வருவது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக புலனாகிறது.

அதேபோன்று, மற்றொரு பைக்கில் சாலை சந்திப்பை கடக்க முயன்றவர்களுக்கும் தவறான திசையிலிருந்து அந்த சந்திப்பை கடக்க முயல்வதும் தெரிய வருகிறது. இந்த விபத்து முற்றிலும் சாலை விதிகளை மீறியதாலேயே நடந்திருக்கிறது.

மற்றொரு பைக்கில் வந்தவர்களும் இந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். பஸ் ஓட்டுனர் திருப்பியதால், கீழே விழுந்த மற்ற இருவரும் பஸ்சில் சிக்காமல் உயிர் தப்பி இருக்கின்றனர். எனவே, சாலையில் எதிர்திசையில் செல்வதையும், ஒருவழிப் பாதையில் செல்வதையும் அறவே தவிருங்கள்.

கேடிஎம் ட்யூக் பைக்கை ஓட்டி வந்த சஜின் ஹெல்மெட் அணிந்திருந்தது தெரிய வருகிறது. இருப்பினும், விபத்தின்போது அது பலனளிக்கவில்லை. பின்னால் அமர்ந்திருந்த லோகேஷ் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்தாலும், தவறான திசையில் வந்தது விபத்துக்கு அடிகோலியிருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Thursday, March 9, 2017, 18:39 [IST]
English summary
Read in Tamil: Wrong side driving is so dangerous.
Please Wait while comments are loading...

Latest Photos