கஃபே ரேஸர் அவதாரத்திற்கு மாறிய யமஹா ஆர்எக்ஸ்-135 பைக்!

காயலாங்கடைக்கு செல்லும் நிலையில் இருந்த யமஹா ஆர்எக்ஸ்135 பைக் ஒன்றை கஃபே ரேஸர் ரகத்தில் மாற்றியிருக்கிறார் பெங்களூரை சேர்ந்த பொறியாளர் ஒருவர். படங்கள், தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

Written By:

பைக் பந்தய வீரர்கள், பைக் ஆர்வலர்கள் மத்தியில் 2 ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்களுக்கு இன்றளவும் மோகம் அதிகம். குறிப்பாக, யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் ஆர்எக்ஸ்135 பைக் மாடல்களுக்கு பைக் ஆர்வர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருக்கிறது.

இந்த பைக்குகளை அவர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருவதை காண முடியும். அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த பொறியாளரான ஷசாங்க் பரத்வாஜ் தனது யமஹா ஆர்எக்ஸ்135 பைக்கை கஃபே ரேஸர் போல மாற்றி பைக் ஆர்வலர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

1998ம் ஆண்டு மாடலான அந்த யமஹா ஆர்எக்ஸ்135 பைக் பழமையாகி போனதால் தோற்றப் பொலிவை இழந்து, எஞ்சின் பிரச்னைகளுடன் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த பைக்கிற்கு புதுப்பொலிவு கொடுக்க ஷசாங்க் முடிவு செய்தார்.

கடந்த ஜனவரி மாதம் பைக்கிற்கு புதுப்பொலிவு கொடுக்கும் பணிகளை துவங்கியிருக்கின்றனர். அதன்பிறகு பல்வேறு வேலைப்பாடுகளுடன் இப்போது கஃபே ரேஸர் அவதாரத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது இந்த யமஹா ஆர்எக்ஸ்135 பைக்.

புதிய பெட்ரோல் டேங்க், கஃபே ரேஸர் பைக்கிற்கு உரிய சிறிய இருக்கை, கிளிப் ஆன் ஹேண்டில்பார், புதிய ஸ்விங் ஆர்ம் என பெரிய அளவிலான மாறுதல்களை கண்டிருக்கிறது இந்த பைக்.

டிஸ்க் பிரேக்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கிற்கான பல உதிரிபாகங்கள் யமஹா ஆர்15 வி2.0 பைக்கினுடையதை வாங்கி பயன்படுத்தியிருக்கின்றனர். பல மாத முயற்சியிலும், உழைப்பிலும் இந்த புதிய கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து பரத்வாஜ் கூறியிருப்பதாவது," எல்லோருக்கும் சூப்பர் பைக்குகள் மற்றும் நேக்டு ரோட்ஸ்டெர் பைக் மாடல்கள் மீதும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், எனக்கு கஃபே ரேஸர் மாடல்கள் மீது அதிக ஈர்ப்பு உண்டு.

இதற்காக, கடந்த ஜனவரி மாதம் 1998ம் ஆண்டு யமா ஆர்எக்ஸ்135 மோட்டார்சைக்கிள் ஒன்றை வாங்கினேன். அது காயலாங்கடைக்கு செல்லும் நிலையில்தான் இருந்தது.

எனக்கு பரிட்சயமான ஒரு ஒர்க்ஷாப் மூலமாக இந்த பைக்கை கஃபே ரேஸராக மாற்ற முடிவு செய்தேன். இறுதியாண்டு பொறியியல் படித்து வருவதால் இந்த பைக்கை உருவாக்குவதில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியவில்லை.

 

 

இதனால், சற்று தாமதமானது. ஆனாலும், எனது பைக் மிகச்சிறப்பாக வந்துள்ளது. கோல்டன் ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ணக் கலவையை பயன்படுத்தியிருக்கிறோம். கிட்டத்தட்ட 9 மாதங்களில் இந்த பைக்கை முழுவதுகமாக உருவாக்கியிருக்கிறோம்.

இந்த பைக்கை ஓட்டும்போது சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றில் சில நடைமுறை பிரச்னைகள் உள்ளன. அந்த பிரச்னைகளை அடுத்த சில வாரங்களில் சரி செய்துவிடுவேன் என்று நம்புகிறேன்," என்று பரத்வாஜ் தெரிவித்தார்.

இந்த பைக்கை முழுவதுமாக உருவாக்குவதற்கு ரூ.1 லட்சம் வரை செலவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Yamaha RX135 Turns Into Cafe Racer Avatar. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos