ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

By Saravana

உலகின் அனைத்து தரப்பினரின் கனவு காராக ரோல்ஸ்ராய்ஸ் விளங்குகிறது. பணம் இருந்தாலும் ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்குவது பலருக்கு பகல் கனவாகவே இருக்கிறது. ஏனெனில், அந்த காரை வாங்குவதற்கான சட்டத்திட்டங்களும், பின்புல ஆராய்ச்சியும் தடை கற்களாக இருக்கின்றன.

இந்த நிலையில், சிறு வயது முதலே ரோல்ஸ்ராய்ஸ் கனவில் இருந்த இளம் மெக்கானிக் ஒருவர் அதனை சொந்தமாக தயாரித்து அசத்தியுள்ளார். கஜகஸ்தான் நாட்டின் கரகண்டா பகுதியை சேர்ந்த ரஸ்லன் முகனோவ் என்ற அந்த மெக்கானிக்கின் கைவண்ணத்தில் உருவான ரோல்ஸ்ராய்ஸ் காரின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

கனவு கார்

கனவு கார்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கனவு ரோல்ஸ்ராய்ஸ் கார் உருவான விதத்தை காட்டும் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறு வயது கனவு

சிறு வயது கனவு

பள்ளியில் படிக்கும்போது முகனோவ் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வாங்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்து வந்துள்ளார். அந்த ஆர்வம் காரணமாக வாகன மெக்கானிக் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மேலும், ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்குவது சாத்தியமில்லை என்று உணர்ந்த பின் இந்த முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

பென்ஸ் கார்

பென்ஸ் கார்

பழைய பென்ஸ் 190இ வி12 காரை வாங்கி, அதற்கு ரோல்ஸ்ராய்ஸ் பாடியை செதுக்கி பொருத்தியுள்ளார்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரின் புகைப்படங்களை வைத்து ஸ்கெட்ச் போட்டு இந்த காரை உருவாக்கியுள்ளார். ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை அப்படியே காப்பியடிக்காமல் தனது மனதில் பட்ட கனவு ரோல்ஸ்ராய்ஸ் உருவத்தை அப்படியே நிஜமாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார்.

நிதி ஆதாரம்

நிதி ஆதாரம்

இந்த காரை வடிவமைப்பதற்கு போதிய நிதி இல்லாததால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த காரை அவரால் வடிவமைக்க முடியவில்லை. ஆனால், இடைவிடாத முயற்சியின் பலனாக அந்த காருக்கு தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது.

உதவி இல்லை

உதவி இல்லை

இந்த காரை வடிவமைப்பதாக சொன்னபோது முகனோவ் சகோதரர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட யாரும் உதவி செய்ய முன்வராமல் கேலி பேசியுள்ளனர். ஆனால், இந்த கார் இறுதிக் கட்டத்தை அடைந்தபோது அனைவரும் பாராட்டியுள்ளனர்.

 பானட்டில் பருந்து சிலை

பானட்டில் பருந்து சிலை

ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் பானட்டின் முன்பக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்பிரிட் ஆஃப் எக்டஸி சிற்பத்துக்கு பதிலாக இவர் சோவியத் யூனியன் சின்னமான கழுகு சிலையை காரில் பொருத்தி அழகு பார்த்துள்ளார்.

 செலவு

செலவு

பழைய பென்ஸ் காரை இதுபோன்று ரோல்ஸ்ராய்ஸ் காராக மாற்றுவதற்கு 3,000 டாலர் செலவு பிடித்ததாக முகனோவ் தெரிவித்துள்ளார்.

வாடகைக்கு...

வாடகைக்கு...

இந்த காரை பலர் திருமண நிகழ்வு உள்ளிட்ட விசேஷங்களுக்கு வாடகைக்கு எடுத்துச் செல்கின்றனராம்.

செலிரிபிரிட்டி

செலிரிபிரிட்டி

இந்த காரை வடிவமைத்த பின்னர் அந்த பகுதியின் நட்சத்திரமாக இவர் ஜொலித்து வருகிறார். சில விளம்பர தட்டிகளில் கூட இவரது படத்தை போட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு பிரபலமாக மாறியுள்ளார். ஒரு வோட்கா விளம்பரத்தில் முகனோவ் இருப்பதை காணலாம்.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

ரோல்ஸ்ராய்ஸ் கனவில் இருந்த இளம் மெக்கானிக் ஒருவர் அதனை சொந்தமாக தயாரித்து அசத்தியிருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் இதை விட பெரிய ஆச்சரியம் ஒன்று உங்களுக்கு அடுத்ததாக காத்திருக்கிறது.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

ஆம், விவசாயி ஒருவர் சொந்தமாக விமானம் தயாரித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். இதற்கான காரணம் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவது உறுதி. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

வட கிழக்கு சீனாவை சேர்ந்த விவசாயி ஸூ யுவே. இவர் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பயிர் செய்து வருகிறார். நம்மில் பலருக்கும் இருப்பது போல, விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை விவசாயி ஸூ யுவே-வுக்கும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதை ஸூ யுவே-வின் ஆசை என கூறுவதை விட வாழ்நாள் லட்சியம் என்று சொல்வதுதான் மிக பொருத்தமாக இருக்கும். ஆனால் தனது வாழ்நாள் லட்சியத்தை கடந்த வருடம் வரை ஸூ யுவே-வால் எட்ட முடியவில்லை.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

இதற்கு ஓர் முக்கிய காரணம் உள்ளது. விமானத்தில் பயணிக்க வேண்டும்தான். ஆனால் அது தனது சொந்த விமானமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஸூ யுவே-வின் உண்மையான லட்சியம். இதனால்தான் கடந்த வருடம் வரை அவரால் தனது வாழ்நாள் லட்சியத்தை அடைய முடியாமல் போனது.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

அதற்காக ஸூ யுவே மனம் உடைந்து விடவில்லை. பலரும் ஆச்சரியப்படக்கூடிய வகையிலான ஓர் முடிவை மிகவும் துணிச்சலாக எடுத்தார். அவரது முடிவு பலரது புருவங்களையும் உயர்த்தியது. சொந்தமாக ஓர் விமானத்தை தயாரித்து விடுவது என்பதுதான் அந்த துணிச்சலான முடிவு.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

வெறுமனே முடிவு எடுத்ததுடன் மட்டும் ஸூ யுவே நின்று விடவில்லை. உடனடியாக பணிகளை ஆரம்பித்தார். விமானத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன. ஸூ யுவே தயாரித்துள்ள விமானம் அச்சு அசலாக ஏர்பஸ் ஏ320 (Airbus A320) விமானம் போலவே உள்ளது.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

விவசாயி ஸூ யுவே பள்ளிப்படிப்பை கூட நிறைவு செய்யாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்தமாக விமானம் தயாரிக்க வேண்டும் என்று ஸூ யுவே முடிவு செய்த உடனேயே இணைய தளங்களின் வாயிலாக தகவல்களை திரட்ட தொடங்கினார். ஆன்லைன் புகைப்படங்களை சேகரித்து ஆராய்ச்சிகளை செய்தார்.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

முன்னதாக சீனாவின் கையுவான் என்ற சிறிய நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் வெல்டிங் பிரிவில் ஒரு முறை ஸூ யுவே வேலை செய்து வந்தார். அங்கு பணியாற்றிய அனுபவம் விமானம் தயாரிக்கும் பணியில் ஸூ யுவே-க்கு உதவியது. இதுதவிர ஸூ யுவே-வின் நண்பர்கள் 5 பேரும் அவருக்கு உதவி செய்தனர்.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

விமானத்தின் இன்ஜின், இறக்கைகள், காக்பிட் உள்ளிட்டவற்றுக்காக 60 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. டெய்லிமெயில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாயை ஸூ யுவே செலவிட்டுள்ளார். இது அனைத்தும் அவரது சேமிப்பில் இருந்த தொகையாகும்.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

ஆனால் இந்த விமானம் உடனடியாக பறப்பதற்கு பயன்படுத்தப்படாது என ஸூ யுவே தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விமானத்தை தற்போதைக்கு ஹோட்டல் போன்ற ஓர் அமைப்பாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

இதுகுறித்து ஸூ யுவே மேலும் கூறுகையில், ''எனக்கு நடுத்தர வயது வந்து விட்டது. எனவே என்னால் இனி விமானம் வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன். எனினும் சொந்தமாக ஓர் விமானத்தை நம்மால் தயாரிக்க முடியும் என உறுதியாக நம்பினேன். அதன் விளைவுதான் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விமானம்.

சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...

எனினும் இதில் ஒரு சில குறைகள் இருக்கவே செய்கின்றன. எனவே தற்போது இந்த விமானத்தில் ஹோட்டல் நடத்த முடிவு செய்துள்ளேன். இங்கு உணவு அருந்த வருகை தரும் ஒவ்வொருவருக்கும் அதிபர் போன்ற உணர்வு ஏற்பட வேண்டும். எனவே சிவப்பு கம்பளம் விரித்து, அவர்களை உபசரிக்க உள்ளோம்'' என்றார்.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

சொந்தமாக விமானம் தயாரித்து விவசாயி ஸூ யுவே நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த நேரத்தில் விமானங்களின் பைலட்கள் பற்றிய ஒரு ஆச்சரியமான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

விமானங்களில் பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள். அது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

விமான பயணம் என்பது அலாதியானது. விமானங்களில் பயணம் செய்யும்போது பல்வேறு சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைக்கும். எனவே விமானங்களில் பயணம் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் விமான பயணங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதையும் மறுத்து விட முடியாது. எனவே பாதுகாப்பிற்காக விமானங்களில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

இதில், விமானங்களின் பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட கூடாது என்ற விதிமுறையும் ஒன்று. ஆம், உண்மையில் இப்படி ஒரு விதிமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. கேட்பதற்கு இது ஏதோ நியாயமற்ற விதிமுறை என்பது போல் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அதற்கு பின்னால் அருமையான காரணம் ஒன்று அடங்கியுள்ளது.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

அதாவது ஒரு உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தாலோ அல்லது அது ஃபுட் பாய்சனை ஏற்படுத்த கூடியதாக இருந்தாலோ ஒரு பைலட் மட்டுமே பாதிக்கப்படுவார். மற்றொரு பைலட் பாதிப்படைய மாட்டார். எனவே அவர் மேற்கொண்டு பணிகளை தொடரலாம். இதன் காரணமாகதான் விமானங்களின் பைலட்கள், கோ-பைலட்களுக்கு வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுகின்றன.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

இது தொடர்பாக பெரும்பாலான விமான நிறுவனங்களும் தங்களுக்கென விதிகளை வகுத்து வைத்துள்ளன. பொதுவாக விமானங்களில் ஃபுட் பாய்சன் ஏற்படுவது என்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வுதான். அதற்காக வாய்ப்பே இல்லை என்று கூறி விட முடியாது. இதற்கு முன்பாக விமான ஊழியர்கள் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

கடந்த 1982ம் ஆண்டு, பாஸ்டன் நகரில் இருந்து லிஸ்பன் நகருக்கு பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில், 10 ஊழியர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டது. இதில், பைலட், கோ-பைலட் மற்றும் விமானத்தின் இன்ஜினியர் ஆகியோரும் அடங்குவர். மரவள்ளி கிழங்கால் சமைக்கப்பட்ட ஒரு உணவை உட்கொண்டதால்தான், அவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான விபரீதமும் அப்போது நடைபெறவில்லை. விமான ஊழியர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டதால், அந்த விமானம் மீண்டும் பாஸ்டன் நகருக்கே திரும்பி, பத்திரமாக தரையிறங்கி விட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் எதிரொலியாகதான், பைலட் மற்றும் கோ-பைலட் ஆகியோருக்கு வெவ்வேறான உணவுகள் வழங்கப்படுகின்றன.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

விமானங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பும் பைலட்களின் கைகளில்தான் உள்ளது. பைலட்கள் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் பயணிகளால் விமானங்களில் ரிலாக்ஸாக பயணம் செய்ய முடிகிறது. எனவே பைலட்களின் உடல் நலனும் மிகவும் முக்கியமானது.

விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

பைலட் மற்றும் கோ-பைலட்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக மற்றொரு விஷயத்தையும் இங்கே பகிர்ந்து கொள்கிறோம். ஒரு சில விமானங்களில், படிநிலை அடிப்படையில்தான் பைலட் மற்றும் கோ-பைலட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சீனியாரிட்டி அடிப்படையில், உணவு வழங்கும் நடைமுறையை ஒரு சில விமான நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.

அதாவது விமானங்களின் பைலட்களுக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் உணவு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே சமயம் விமானங்களின் கோ-பைலட்கள், பிஸ்னஸ் கிளாஸில் இருந்துதான் தங்கள் உணவை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

படங்கள்: Voxpopuli

Most Read Articles
English summary
A young auto mechanic from Karaganda region of Kazakhstan started dreaming of owning a Phantom nice years ago. Of course, at the time, he was in school and couldn't really afford buying one, but he never gave up on the idea.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X