ஸ்டீயரிங் வீலை பிடிக்கும் முறையை வைத்தே உங்கள் குணாதிசயத்தை கூறிவிடலாமாம்!

வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் நேரத்தைவிட, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நேரம் அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காரில் அதிக நேரம் செலவிடும் ஓட்டுனர்களை வைத்து, டாம் வான்டர்பில்ட் என்ற எழுத்தாளர் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அதில், நீங்கள் ஸ்டீயரிங் பிடிக்கும் முறையை வைத்தே, உங்களது குணாசியத்தை கூறி விட முடியும் என்கிறார் அவர். வாருங்கள், அவரது சுவையானத் தகவல்களை எமது டிரைவ்ஸ்பார்க் குழு எடுத்த புகைப்படங்களை வைத்து விளக்கிக் காணலாம்.

01. நீங்க ரொம்ப பர்ஃபெக்ட்டாம்...

01. நீங்க ரொம்ப பர்ஃபெக்ட்டாம்...

படத்தில் இருப்பது போன்று ஸ்டீயரிங் வீலை பிடித்து ஓட்டுபவர்கள் ரொம்பவே பர்ஃபெக்ட்டான இருப்பவர்களாம். எதை செய்தாலும், மிகவும் சரியாக செய்யும் நம்பிக்கை அதிகம் இருப்பதால், வாழ்வில் வெற்றிகரமான மனிதர்களாக ஜொலிப்பார்கள் என்று அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 02. ரொம்ப கூலான ஆள்பா நீங்க...

02. ரொம்ப கூலான ஆள்பா நீங்க...

வாழ்க்கையை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் எந்நேரமும் கூலாக இருப்பார்களாம். எந்த ஒரு சூழலையும், மிக எளிதாகவும், பதட்டமில்லாமலும் எதிர்கொள்வீர்களாம். ஊர், உலகம் சொல்வதை பற்றி கவலை கொள்ளமாட்டீர்கள். கடினமான சூழ்நிலையை கூட வசந்தமான நாட்கள் போல கருதி செயல்படுவீர்களாம். குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களுடன் செலவிடும் நேரத்தில் மிகுந்த உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்களாம்.

03. எல்லாமே ஈஸிதான்...

03. எல்லாமே ஈஸிதான்...

வாழ்க்கையை மிக எளிமையாக எடுத்துக்கொள்வீர்களாம். இஷ்டத்துக்கு நண்பர்களை சேர்த்துக் கொள்வதை தவிர்த்து, உண்மையான, நேர்மையான நண்பர்களுடன் மட்டுமே பழகுவீர்கள். நாடகத்தனமில்லாமல் பழகும் உங்களை பலரும் விரும்புவார்கள்.

 04. சாகசக்காரர்கள்...

04. சாகசக்காரர்கள்...

ரிஸ்க் எடுக்காமல் வாழ்க்கையில் த்ரில் இல்லாமல் போரடிக்கும் என்று நம்புபவர்கள் நீங்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டீர்களாம். பங்கி ஜம்பிங், ஸ்கைடைவிங் போன்ற விளையாட்டுகள் மீதும் அதிக ஆர்வம் இருக்குமாம். உங்கள் சாகச செயல்களும், எண்ணங்களையும் பார்த்து பலராலும் வசீகரிக்கப்படுவீர்கள்.

 05. ஓகே பாஸ்....

05. ஓகே பாஸ்....

இதுபோன்று ஸ்டீயரிங் வீலை பிடித்து ஓட்டுபவர்கள் இயற்கையாகவே தலைமை பண்புகள் அதிகமிருக்குமாம். எந்த சூழ்நிலையையும் மிக நிதானமான சமாளித்து செல்லும் திறன் படைத்தவர்கள் நீங்கள். உங்களது ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களையும் பலரும் விரும்புவர். உங்களது தலைமைப் பண்புக்காக அடிக்கடி பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

06. ஆதரவு மனப்பான்மை

06. ஆதரவு மனப்பான்மை

குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் மிகவும் விரும்பப்படும் நபராக இருப்பீர்கள். பிறர் வெற்றிபெறும்போது அதனை மனதார பாராட்டும் குணமும், நேர்மையும் நிறைந்தவர்களாக இருப்பீர்கள்.அதேபோன்று, சூழ்நிலைகளை கூர்ந்து கவனிப்பதிலும் சிறந்தவர்களாக இருப்பீர்கள். எப்போதுமே நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவதால், பிறரால் ஈர்க்கப்படுவீர்கள். பிறருக்கு ஆதரவாக செயல்படுவதிலும் தயங்க மாட்டீர்கள்.

 07. அமைதி போராளி...

07. அமைதி போராளி...

வீண் விவாதங்களை தவிர்க்க விரும்புவீர்கள். உங்களது சவுகரியத்தை குறைக்கும் எந்த விஷயத்திலும் தலை கொடுக்க விரும்பமாட்டீர்கள். பிரச்னைகளை பெரிதாக்காமல், அதற்கு சுமூக தீர்வு கண்டறிவதில் அமைதியாக கவனம் செலுத்துவீர்கள்.

 08. மகிழ்ச்சி...

08. மகிழ்ச்சி...

எப்போதுமே நீங்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடும். வாழ்க்கையை வித்தியாசமாக வாழ்வதிலும், புதிய விஷயங்களை செய்வதிலும் நாட்டம் அதிகமிருக்கும். ஓவியக் கலை உள்ளிட்டவற்றிலும் கை தேர்ந்தவர்களாக இருப்பர். மேலும், நகைச்சுவை உணர்வும் அதிகமிருக்கும். உங்களை வெற்றிகொள்ள யாரும் சீக்கிரமாக முன்வரமாட்டார்களாம்.

09. அச்சம்...

09. அச்சம்...

சங்கர் சிமென்ட் விளம்பரம் போல வீட்டை பூட்டி விட்டோமா என நான்கு தரம் பூட்டை இழுத்து பார்த்தும் நம்பிக்கை வராத குணாதிசயம் கொண்டவர்களாம். எந்த வேலையை செய்தாலும், ஒருமுறைக்கு மூன்று முறை சரிபார்த்த பின்னரே வேலையை முடிப்பீர்களாம். அதாவது, எப்போதுமே எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முனைவீர்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயங்களை தவிர்க்க பார்ப்பீர்கள். மேலும், குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் உங்களுக்கு மிகுந்த நன்மதிப்பு இருக்குமாம்.

10. நான் ரொம்ப பிஸி...

10. நான் ரொம்ப பிஸி...

எந்த நேரமும் பரபரப்பாகவே காணப்படுவீர்கள். வழியில் இருக்கும் தடைகளை பற்றி கவலைப்படாமல் அடித்து மோதிக்கொண்டு சென்று விட வேண்டும் என்று முனைப்போடு இருப்பீர்கள். அது கார் டிரைவிங்காக இருந்தாலும் சரி, வாழ்வியல் விஷயங்களாக இருந்தாலும் சரி. எப்போதுமே இலக்கை நோக்கி பயணிக்கும் ஆள் என்பதுடன், அதற்கான செயல்களிலும் தீவிரம் காட்டுவீர்களாம்.

 சரி, சரி...

சரி, சரி...

சரி, சரி இதில் எந்த வகை குணாதிசயம் உங்களுக்கு பொருந்துகிறது என்பதை பார்த்து, அந்த எண்ணை கமென்ட் பாக்ஸில் குறிப்பிட மறக்க வேண்டாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Your Driving Style Reveals About Your Personality.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X