செக்வேயும், வெஸ்பாவும் கலந்து கட்டிய புதிய செக்வே ஸ்கூட்டர்!

By Saravana

செக்வே ஸ்கூட்டர் கான்செப்ட்டையும், வெஸ்பா ஸ்கூட்டர் டிசைனையும் கலந்து கட்டி புதிய செக்வே ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது ஸ்பெயினை சேர்ந்த பெல் அண்ட் பெல் நிறுவனம்.

கைகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பா பிராண்டு காதலர்களை வெகுவாக கவரும். இந்த செக்வே ஸ்கூட்டரின் படங்கள் மற்றும் சுவையான கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரிஜினல் பாகங்கள்

ஒரிஜினல் பாகங்கள்

'ஸீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பா' என்ற பெயரிலான இந்த செக்வே ஸ்கூட்டர் மாடலுக்கான பாகங்கள் வெஸ்பாவின் தாய் நிறுவனமான பியாஜியோவிடமிருந்தே பெறப்பட்டுள்ளன.

மின் மோட்டார்

மின் மோட்டார்

இந்த ஸ்கூட்டரில் இரண்டு 1000 வாட் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது அதிகபட்சமாக மணிக்கு 20 கிமீ வேகத்தில் செல்லும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 35 கிமீ., தொலைவு செல்வதற்கான பேட்டரி திறனை கொண்டுள்ளது.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

180 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 30 டிகிரி சரிவான பாதைகளில் கூட இந்த புதிய செக்வே ஸ்கூட்டர் அனாயசமாக செல்லும்.

பேலன்ஸ்

பேலன்ஸ்

ஓட்டுபவரின் எடைக்கு தகுந்தாற்போல் தானாகவே சமன் செய்து கொள்ளும் வசதி கொண்டது.

அம்சங்கள்

அம்சங்கள்

இந்த செக்வே ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரின் உயரத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ள முடியும். இதனை 360 டிகிரி கோணத்தில் திருப்ப முடியும் என்பதும் கூடுதல் வசதி.

 விலை

விலை

2,995 யூரோ விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.2.55 லட்சம் விலை கொண்டது.

Most Read Articles
Story first published: Tuesday, February 18, 2014, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X