டியூக் 200 சக்ஸஸ்.. புதிய சூப்பர் பைக் மாடல்களை களமிறக்க பஜாஜ்

Posted by:

கேடிஎம் பிராண்டில் அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள் விற்பனையாகிறது.

இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ தற்போது ருசி கண்ட பூனையாக கேடிஎம் பிராண்டில் மேலும் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

டியூக் வரிசையில் 125சிசி மற்றும் 375சிசி பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இரு பைக் மாடல்களும் ஏற்கனவே ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சில மாற்றங்களை மட்டும் செய்து உடனடியாக விற்பனைக்கு கொண்டு வர முடியும். படத்தில் நீங்கள் பார்ப்பது கேடிஎம் பிராண்டின் 1000சிசி சூப்பர் பைக். இந்த பைக்கும் பஜாஜ் பட்டியலில் இருக்கிறதாம்.

மேலும், தற்போது கேடிஎம் பிராண்டுக்கென தனி ஷோரூம்களை பஜாஜ் அமைத்து வருகிறது. இதன் மூலம் கேடிஎம் பைக்குகளுக்கு நிறைவான சர்வீஸ் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும் என்பதால் நிச்சயம் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்ய முடியும் என்று பஜாஜ் நம்புகிறது.

Story first published: Saturday, July 14, 2012, 11:07 [IST]
English summary
Bajaj Auto is planning to launch more KTM superbikes in India. The company wants to expand its presence in the superbike segment which it entered by launching the KTM Duke 200 in India. The KTM Duke 200 has been a successful model with an average sales of 1,000 units per month.
Please Wait while comments are loading...

Latest Photos