ரூ.60,000 ஆன்ரோடு விலைக்குள் டாப்-10 பைக்குகள்!

Posted by:

போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்வதில் பைக்குள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எரிபொருள் விண்ணை முட்டி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் கார் இருந்தால் கூட எளிதாகவும், விரைவாகவும் செல்வதற்கும் பைக்குளே சிறந்தவை. அதிக மைலேஜ், பட்ஜெட் விலை கொண்ட பைக் மாடல்கள் மார்க்கெட்டில் மலிந்து விட்டன.

இருப்பினும், சிறந்த நிறைவான மைலேஜ், பட்ஜெட் விலை கொண்ட சிறந்த டாப் - 10 பைக் மாடல்களின் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். ரூ.60,000 ஆன்ரோடு விலைக்குள் கிடைக்கும் மாடல்களை அடிப்படையாக கொண்டு இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா

விலை: ரூ.46,781

மைலேஜ்: 77 கிமீ/லி

குறைந்த விலை மட்டுமல்ல அதிக மைலேஜ் தரும் நம்பிக்கையான பைக். கரடுமுரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கும் சிறந்த பைக். 8.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 2 லிட்டர் ரிசர்வ் வசதியுடன் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க்கை கொண்டிருக்கிறது. 113 கிலோ எடை கொண்டது. பஜாஜின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டிருப்பதும் கூடுதல் பலம்.

 

பஜாஜ் டிஸ்கவர் டிடிஎஸ்ஐ 100

விலை: ரூ.52,938

மைலேஜ்: 77 கிமீ/லி

அனைத்து சாலைநிலைகளுக்கும் ஏற்ற இந்த பைக்கின் மைலேஜ்தான் இதற்கு முக்கிய பலம். 7.7 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 94.38 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டெயில் லைட், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி கொண்டது. பின்புறம் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷனும், முன்புறம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனையும் கொண்டிருக்கிறது. 2.3 லிட்டர் ரிசர்வுடன் கூடிய 8 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

 

யமஹா க்ரக்ஸ்

விலை: ரூ.45,141

மைலேஜ்: 65 கிமீ/லி

விற்பனையில் ஓஹோவென்று இல்லாவிட்டாலும் யமஹா பிராண்டை விரும்புவர்களுக்கு ஏற்ற மார்க்கெட்டில் கிடைக்கும் குறைந்த விலை பட்ஜெட் பைக். நிறைவான மைலேஜ் தரும். 7.6 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 106 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த பைக் 113 கிலோ எடை கொண்டது.

 

டிவிஎஸ் ஸ்போர்ட்

விலை: ரூ.49,895

மைலேஜ்: 68 கிமீ/லி

கிராமங்களின் ராஜாவான ஸ்போர்ட் குறைந்த விலை, அதிக மைலேஜ் என அனைத்திலும் ஸ்கோர் செய்துவிடுகிறது. 8.18 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 95 கிலோ எடை கொண்டது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்கை கொண்டுள்ளது.

 

சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ்

விலை: ரூ.59,400

மைலேஜ்: 55 கிமீ/லி

125 சிசி செக்மென்ட்டில் குறைந்த விலை கொண்ட மாடல்களில் ஒன்று. 8.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.1 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் வீல், எலக்ட்ரிக் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கிறது.

 

சுஸுகி ஹயாட்டே

விலை: ரூ.50,450

மைலேஜ்: 62 கிமீ/லி

சுஸுகியின் புதிய பட்ஜெட் பைக். 8.8 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 112.8 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. 112 கிலோ எடை கொண்டது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடலும் கிடைக்கிறது.

 

ஹோண்டா ட்ரீம் யுகா

விலை: ரூ.58,

மைலேஜ்: 65 கிமீ/லி

ஹோண்டா அறிமுகப்படுத்திய புதிய மாடல். 8.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 109 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் சஸ்பென்ஷனை கொண்டிருக்கிறது. அலாய் வீல், எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல்களிலும் கிடைக்கிறது.

 

ஹீரோ எச்எஃப் டான்


விலை: ரூ.43,910

மைலேஜ்: 72 கிமீ/லி

மார்க்கெட்டிலேயே குறைந்த விலை கொண்ட பைக் மாடல் இதுதான். 7.8 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 97.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. நம்பகமான ஸ்மூத்தான எஞ்சின், ஹீரோவின் டீலர் நெட்வொர்க் ஆகியவை கூடுதல் பலம்.

 

 

ஸ்பிளென்டர் ப்ரோ

விலை: ரூ.53,540

மைலேஜ்: 65 கிமீ/லி

நாட்டின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல். பட்ஜெட் விலை, அதிக மைலேஜ், சிறந்த வசதிகள் அனைத்திலும் தன்னிறைவு அம்சங்களை கொண்டிருக்கிறது. குறைந்த பராமரிப்பு கொண்டது.

 

ஹீரோ பேஸன் ப்ரோ

விலை: ரூ.57,450

மைலேஜ்: 60 கிமீ/ லி

ஸ்பிளென்டருக்கு அடுத்து ஹீரோவின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல் இது. வசதிகள், தோற்றம், மைலேஜ் என அனைத்திலும் நிறைவை தரும். அலாய் வீல், எலக்ட்ரிக் ஸ்டார்ட் உள்ளிட்ட மாடல்களிலும் கிடைக்கிறது. 7.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 97.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இதன் 110 சிசி திறன் கொண்ட மாடலும் 'பேஸன் எக்ஸ் ப்ரோ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

Story first published: Saturday, December 22, 2012, 16:12 [IST]
English summary
Which are the top 10 budget bikes in India? Drivespark presents to you the answer. Here are India's best selling budget bikes along with their price, specs and Photos.
Please Wait while comments are loading...

Latest Photos