புதிய கரிஷ்மா பைக்குகளின் எஞ்சின் பவர் விபரம்!!

By Saravana

ஹீரோ மோட்டோகார்ப் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய கரிஷ்மா பைக்குகளின் எஞ்சின் பவர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பழைய மாடலைவிட சற்று கூடுதல் பவர் கொண்டதாக புதிய கரிஷ்மா பைக்குகளின் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளன.

புதிய கரிஷ்மா ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 223சிசி எஞ்சின் 19.2 பிஎஸ் பவரையும், 19.35 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தும். முந்தைய கரிஷ்மா ஆர் மாடலின் எஞ்சின் 17.2 பிஎஸ் பவரையும், 18.35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

மேலும், புதிய கரிஷ்மா ஆர் பைக் 0- 60 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். முந்தைய மாடல் இதே வேகத்தை எட்டுவதற்கு 4 வினாடிகள் எடுத்துக்கொண்டதாக இருந்தது.

இதேபோன்று, புதிய கரிஷ்மா இசட்எம்ஆர் பைக்கின் எஞ்சின் 20 பிஎஸ் பவரையும், 19.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதுவும் 0-60 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karizma ZMR

புதிய கரிஷ்மா பைக்குகள் ஹீரோவின் கூட்டணி நிறுவனமான அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாறுதல்களை கண்டிருக்கிறது. மேலும், எரிக் புயெலின் 1190ஆர்எஸ் மற்றும் 1190ஆர்எக்ஸ் பைக்குகளின் ஹெட்லைட்டின் டிசைன் சாயலும் இந்த புதிய கரிஷ்மா பைக்குகளில் இடம்பெற்றுள்ளது. மேலும், மோனோஷாக்அப்சார்பர் இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது.

Most Read Articles
English summary
Hero MotoCorp revealed the next generation Karizma R and Karizma ZMR first in Macau, which was followed by a press reveal in India on October 10th. The new Karizma motorcycles have been developed with some technological aid from Hero's new American partner Erik Buell racing. This has enabled the Indian bike maker to extract more power out of the Karizma engines.
Story first published: Saturday, October 19, 2013, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X