வருகிறது முழுமையான பேர்டு வெர்ஷன் பல்சர் ஸ்போர்ட்ஸ் பைக்!!

By Saravana

நேக்டு மாடல் பல்சர் 200 என்எஸ் பைக்கின் முழுமையான ஃபேர்டு வெர்ஷன் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது பஜாஜ் ஆட்டோ.

பல்சர் 200என்எஸ் பைக்கைவிட கூடுதல் பவர் கொண்டதாக வரும் இந்த புதிய பைக் மிகுந்த எதிர்பார்ப்பை பல்சர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய பல்சர் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படத்தை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது.

நேக்டு மாடல்

நேக்டு மாடல்

நேக்டு மாடல் பல்சர் 200என்எஸ் பைக் விற்பனையில் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும், அதற்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் பல்சர் 220எஃப் பைக் மார்க்கெட்டின் பழமையான மாடலாக ஒதுக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக புதிய பல்சர் 200 சூப்பர்ஸ்போர்ட்ஸ்(எஸ்எஸ்) பைக் வருகிறது.

முழு ஃபேரிங் மாடல்

முழு ஃபேரிங் மாடல்

சிறந்த ஏரோடைனமிக்ஸ் தரும் வகையிலான முழுமையான ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்பிளிட் இருக்கைகள், பெரிய பெட்ரோல் டேங்க், வைசர், சிங்கிள் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் உள்ளிட்ட அம்சங்களை புதிய பல்சர் கொண்டிருக்கிறது.

பவர்

பவர்

பல்சர் 200 என்எஸ் பைக்கின் 23.5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எஞ்சினை 24 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அலாய் வீல்

புதிய அலாய் வீல்

புதிய பல்சர் 200எஸ்எஸ் பைக்கில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Image Source: Autocar

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் யமஹா ஆர்15 ஆகிய பைக்குகளுக்கு புதிய பல்சர் கடும் நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The following scope image of a fully faired Bajaj Pulsar has taken everyone by surprise. Yes, a fully faired sports bike model of the Pulsar was expected, but it was supposed to be based on the KTM Duke 390. Instead, the new bike is being reported as being powered by a 200cc engine.
Story first published: Saturday, October 26, 2013, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X