ரூ.2 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த பிரிமியம் பைக்குகள்!

சாதாரண ரக பைக்குகளிலிருந்து வாடிக்கையாளர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக பிரிமியம் பைக்குகள் மீது திரும்பியிருக்கிறது. இதனையடுத்து, பிரிமியம் பைக்குகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ரூ.2 லட்சத்திற்குள் மார்க்கெட்டில் தற்போது விற்பனையில் இருக்கும் சிறந்த மோட்டார்சைக்கிள்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம். ஒவ்வொருவரின் ரசனைகேற்ப மாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தோதான விலையில் டியூக்

தோதான விலையில் டியூக்

கைக்கு எட்டும் விலையில் சிறந்த தோற்றம் கொண்ட பிரிமியம் பைக்காக கேடிஎம் டியூக் 200 விளங்குகிறது. இதனால், விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 34.5 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று குறிப்பிடுகிறது. 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் எஞ்சின் 25 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ரூ.1.40 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

சிறந்த கட்டுமானம்

சிறந்த கட்டுமானம்

இந்த ரக பைக்குகளில் சிறந்த கட்டுமானம் கொண்ட மோட்டார்சைக்கிளாக ராயல் என்பீல்டின் கிளாஸிக் 500ஐ கூறலாம். 27.2 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்கம் டிஸ்க் பிரேக், பாடி கலர் ஃபிரேம் ஆகியவை கூடுதல் அம்சங்கள்.ரூ.1.80 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

மைலேஜுக்கு சிபிஆர்.,(Non ABS)

மைலேஜுக்கு சிபிஆர்.,(Non ABS)

இந்த ரக பைக்குகளில் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட பைக்காக ஹோண்டா சிபிஆர் 250ஆர் (Non ABS)பைக்கை கூறலாம். 25 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 35.75 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.1.75 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 அழகுக்கும் சிபிஆர்.,தான்

அழகுக்கும் சிபிஆர்.,தான்

சிறந்த தோற்றம் கொண்ட பைக்காக சிபிஆர் 250ஆர் பைக்கை கூறலாம். மேலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைப்பதால் கூடுதல் பாதுகாப்பு கொண்ட பைக்காகவும் கூற முடியும். புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், சிறந்த டிசைன் ஆகியவை ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கை விற்பனையில் முன்னிலையில் வைத்துள்ளது. ரூ.2 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 மதிப்புக்கு தண்டர்பேர்டு

மதிப்புக்கு தண்டர்பேர்டு

ரூ.2 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட ரகத்தில் ராயல் என்பீல்டின் தன்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிள் சிறந்ததாக இருக்கிறது. 20 லிட்டர் பெட்ரோல் டேங்க், புரொஜெக்டர் லைட், ஸ்பிளிட் இருக்கைகள் என பல புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. கிளாஸிக் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இதிலும். பவர் கூட ஒன்றுதான். தோற்றம், நம்பகத்தன்மை, சிறந்த எஞ்சின் என அனைத்திலும் சிறப்பான மோட்டார்சைக்கிளாக இருக்கிறது தன்டர்பேர்டு 500. இதனால்தான் இந்த மோட்டார்சைக்கிளை பல மாதங்கள் காத்திருந்து வாங்குகின்றனர் வாடிக்கையாளர்கள். ரூ. 1.87 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X