பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்

பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனத்தின் 90ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதிய மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி என்று பெயரிடப்பட்ட இந்த புதிய பைக் முழுவதும் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி கொண்டது. கஃபே ரேஸர் மாடலில் டிசைன் செய்யப்பட்ட இந்த பைக் டூரர் ரக அம்சங்களை தாங்கி வந்துள்ளது. இதுவரை வந்த பிஎம்டபிள்யூ பைக்குகளில் மிக அழகானதாக வர்ணிக்கப்படும் இந்த பைக்கின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கஸ்டமைஸ்

கஸ்டமைஸ்

இந்த பைக்கை கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கு ஏதுவாக ஏராளமான ஆக்சஸெரீஸ்களை பிஎம்டபிள்யூ வழங்குகிறது. சொந்தமாகவோ அல்லது பைக் கஸ்டமைஸ் நிபுணர்களின் உதவியுடன் இந்த ஆக்சஸெரீஸ்களை எளிதாக மாற்றிக் கொள்ளும் விதத்திலேயே இந்த பைக் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலான பிஎம்டபிள்யூ ஆர்32 வில் பொருத்தப்பட்டிருந்த அதே கிளாசிக் ப்ளாட் ட்வின் பாக்ஸர் எஞ்சின் டிசைனுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்திய பாக்ஸர் எஞ்சினை இதில் பொருத்தியிருக்கின்றனர்.

பவர்

பவர்

1170சிசி திறன் கொண்ட எஞ்சின் 110 எச்பி ஆற்றலையும், 119 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

 கஸ்டமைஸ் வசதி

கஸ்டமைஸ் வசதி

பின்புற இருக்கை, சைலென்சர், வால் பகுதி ஆகியவற்றை எளிதாக கழற்றிவிட்டு, பிடித்தமான ஆக்சஸெரீஸ்களை எளிதாக பொருத்த முடியும். மேலும், ஹெட்லைட், இன்டிகேட்டர்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.

ஃபோர்க்குகள்

ஃபோர்க்குகள்

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் முன்புற போர்க்குகள்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த பைக்கின் மற்றொரு விசேஷமாக ஸ்விங் ஆர்மை கூறலாம். இதில், ஒருபக்கத்திலான ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டு சக்கரம் இணைக்கப்பட்டுள்ளது. மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

டயர்கள்

டயர்கள்

ஒற்றை ஸ்விங் ஆர்ம் கொண்ட இந்த பைக்கில் 17 இஞ்ச் சக்கரத்தையும், 5.5 இஞ்ச் அல்லது 6 இஞ்ச் வரையிலான டயரை பொருத்த முடியும்.

 பிரேக்

பிரேக்

ரேடியல் 4 பிஸ்டன் மோனோ பிளாக் பிரேக் அமைப்புடன் கூடிய 320 மிமீ டிஸ்க் பிரேக் அதி உன்னத பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும்.

 மெட்டாலிக் பெயின்ட்

மெட்டாலிக் பெயின்ட்

கருப்பு நிற மெட்டாலிக் பெயின்ட்டுடன், சில்வர் வண்ண வேலைப்பாடுகள் கொண்ட மாடலையும் பிஎமட்பிள்யூ வழங்குகிறது.

Most Read Articles
English summary
BMW Motorrad has launched an exceedingly beautiful motorcycle, styled like the classic BMW bikes of yore. This cafe racer style tourer is the BMWE R nineT. It is no ordinary motorcycle, having been built to celebrate 90 years of BMW Motorrad. The motorcycle was unveiled by BMW in Munich on October 16.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X