2015ல் டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் முதல் பைக் அறிமுகம்

By Saravana

2015ல் டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணியின் முதல் என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. 500சிசி.,க்கும் குறைவான திறன் கொண்ட பைக்குகளை தயாரிக்கும் விதத்தில் உயர் ரக பைக்குகள் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்துடன் டிவிஎஸ் மோட்டார்ஸ் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணியில் முதலாவதாக 250சிசி திறன் கொண்ட அல்லது அதற்கும் குறைவான திறன் கொண்ட பைக் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பைக் தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை பிஎம்டபிள்யூ மோட்டோராட் அளிக்கும். உற்பத்தி மற்றும் விற்பனையை டிவிஎஸ் மோட்டார்ஸ் கவனிக்க உள்ளது. அதாவது, பஜாஜ் - கேடிஎம் கூட்டணியின் பார்முலாவிலேயே இந்த புதிய கூட்டணியும் செயல்பட உள்ளது.

நேக்டு ரகம்

நேக்டு ரகம்

முதலாவதாக வரும் பைக் கேடிஎம் டியூக் போன்றே நேக்டு மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

குறிப்பு: முதல் 2 படங்களில் மாதிரிக்காக பிஎம்டபிள்யூவின் விற்பனை செய்து வரும் அதன் குறைந்த சிசி திறன் கொண்ட ஜி650எஸ் பைக் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 2015ல் அறிமுகம்

2015ல் அறிமுகம்

முதலாவதாக வரும் 250சிசி பைக் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும். உள்நாட்டு மார்க்கெட் மட்டுமின்றி ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

பஜாஜுக்கு நெருக்கடி

பஜாஜுக்கு நெருக்கடி

பஜாஜ் ஆட்டோவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் இந்த புதிய கூட்டணி பைக் மாடல்களை வரிசை கட்ட உள்ளது. இதுதவிர, ஐரோப்பிய மார்க்கெட்டில் கேடிஎம் நிறுவனத்தின் சிறிய ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களுக்கு இந்த கூட்டணியின் புதிய பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

அப்பாச்சி பிராண்டில்...

அப்பாச்சி பிராண்டில்...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் பிராண்டிலேயே 200என்எஸ் உள்ளிட்ட என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை களமிறக்கி வருகிறது. இதேபோன்று, டிவிஎஸ் மோட்டார்ஸும் அப்பாச்சி பிராண்டிலேயே புதிய என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை விற்பனை கொண்டு வரும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
BMW Motorrad and its Indian partner TVS Motors are set to pull off a Bajaj-KTM. As in the duo will build sub 500cc, most likely 250cc, possibly even sub-250cc in India in the next two to three years. The two wheeler manufacturers will follow the same path as Bajaj & KTM by developing two versions of their bikes, one wearing the BMM badge and the other the TVS.
Story first published: Monday, October 21, 2013, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X