அவப்பெயரை போக்க இந்தியாவில் நேரடியாக களமிறங்கும் டுகாட்டி!

By Saravana

டுகாட்டி மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் அதிருப்தியை போக்கும் விதத்தில், இந்தியாவில் நேரடி வர்த்தகத்தில் களமிறங்க இருப்பதாக டுகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனையை துவங்கியது. பிரிசிஸன் நிறுவனத்தை அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளராக நியமித்து வர்த்தகத்தை துவங்கியது.

Ducati Monster

ஆனால், டெலிவிரியில் இழுத்தடிப்பு, சர்வீஸ் குளறுபடிகள் உள்ளிட்ட காரணத்தால் டுகாட்டி பிராண்டு மீது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய மார்க்கெட்டில் நேரடியாக மோட்டார்சைக்கிள் விற்பனையை விரைவில் துவங்க இருப்பதாக டுகாட்டி அறிவித்துள்ளது.

இந்தியாவை மிக முக்கியமான மார்க்கெட்டாக கருதுவதாகவும், டீலர் நெட்வொர்க்கை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்த இருப்பதாகவும் டுகாட்டியின் விற்பனைப் பிரிவு அதிகாரி கிறிஸ்டியானோ சிலேய் கூறியிருக்கிறார்.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமான ஆடி கார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் டுகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவிலுள்ள ஆடி கார் நிறுவனத்தின் டீலர்களின் ஒத்துழைப்புடன் டுகாட்டி மோட்டார்சைக்கிள் ஷோரூம்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Ducati has announced that it will re-enter India soon and this time around it will have an official presence, which should sort out all existing problems.
Story first published: Wednesday, December 11, 2013, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X