'மேட் இன் இந்தியா' ஹார்லி டேவிட்சன் பைக் நாளை அறிமுகம்!

By Saravana

முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட இரண்டு குறைந்த விலை ஹார்லி டேவிட்சன் பைக்குகள் இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்திய சாலைகளில் சமீபமாக தீவிர சோசனைகள் செய்யப்பட்ட இந்த புதிய பைக்குகள் நாளை அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அதற்கு முன்னதாக, இந்த பைக்குகளின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. அதுபற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள ஆலையில்தான் புதிய 500சிசி பைக் வடிவமைக்கப்பட்டது. இந்த பைக்குக்கான பாகங்கள் அனைத்தும் இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறப்படுகின்றன. குறைந்த விலை எம்ஆர்எஃப் டயர்களுடன் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்

அறிமுகம்

இந்த புதிய பைக்குகளை மிலன் ஆட்டோ ஷோவில் நாளை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, இத்தாலி ஆட்டோமொபைல் பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்த பைக்கின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், ஸ்ட்ரீட் 500 மற்றும் ஸ்ட்ரீட் 750 என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்குகளில் லிக்யூட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 500சிசி எஞ்சின் 47 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்திய மார்க்கெட்டுக்கு மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்தியாவில் ஸ்ட்ரீட் 500 மாடல் ரூ.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஸ்ட்ரீட் 750 மாடல் ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலை மாடல்

குறைந்த விலை மாடல்

தற்போது சூப்பர்லோ என்ற பைக் ரூ.6 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் 883சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதைவிட குறைந்த திறன் கொண்ட எஞ்சின் மற்றும் விலையில் 2 புதிய பைக்குகளும் வர இருக்கின்றன.

Most Read Articles
English summary
Harley Davidson Street 750 and Harley Davidson Street 500. These are the very two bikes which have been spotted testing on Indian roads near Harley's facilities several times these past months. What's pleasantly surprising is that until now we were not sure there were going to be two bikes, but rather just the 500cc cruiser. The Street 750 is a welcome surprise.
Story first published: Monday, November 4, 2013, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X