சொந்தமாக ஹீரோ உருவாக்கிய புதிய 100சிசி,1100சிசி, 250சிசி எஞ்சின்கள்!

By Saravana

ஹோண்டா கழன்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற பெற்றுவிட்ட நிலையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் 15 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது. அத்தோடு, அந்த நிறுவனத்திடமிருந்து பல புதிய அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஹீரோ சொந்தமாக உருவாக்கியுள்ள 100, 110சிசி, 250சிசி எஞ்சின்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர, அடுத்த ஆண்டு புதிய பெர்ஃபார்மென்ஸ் பைக் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதில், வடிவமைப்பில் மாற்றங்களுடன் இம்பல்ஸ் பைக்கின் அதிக திறன் கொண்ட புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 ஹோண்டா தொழில்நுட்பம்

ஹோண்டா தொழில்நுட்பம்

2017ம் ஆண்டு வரை ஹோண்டாவின் தயாரிப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமத்தை ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளது. இருப்பினும், சொந்த தயாரிப்புகளுக்கு அந்த நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

புதிய எஞ்சின்கள்

புதிய எஞ்சின்கள்

சொந்தமாக உருவாக்கிய புதிய 100சிசி, 110சிசி மற்றும் 250சிசி எஞ்சின்களை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய எஞ்சின்களை ஹீரோ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எஞ்சின்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதை ஹீரோவின் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த துணைத் தலைவர் அனில் துவா உறுதிப்படுத்தியுள்ளார்.

சொந்த பைக்

சொந்த பைக்

அடுத்த ஆண்டு தனது சொந்த தயாரிப்பில் உருவான புதிய பைக்கையும் ஹீரோ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய பைக் மற்றும் எஞ்சின்கள் பொருத்தப்பட் பைக்குகள் 2016ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 புதிய இம்பல்ஸ்

புதிய இம்பல்ஸ்

ஆஃப்ரோடு மற்றும் சாதாரண சாலை என இரண்டிற்கும் ஏற்ற ஹீரோ இம்பல்ஸ் விற்பனையில் முக்கிய இடத்தை பெறவில்லை. இந்த நிலையில், அதிக திறன் கொண்ட எஞ்சினுடன் புதிய இம்பல்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹீரோ நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டிசைன் மாற்றம்

டிசைன் மாற்றம்

எரிக் புயெல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்பல்ஸ் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக பவன் முஞ்சால் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 விற்பனை

விற்பனை

அதிக திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய இம்பல்ஸ் பைக் இந்தியா தவிர, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் விற்பனைக்கு விட ஹீரோ முடிவு செய்துள்ளது. ஏனெனில், அந்நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் செமி ஆஃப்ரோடு பைக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அதிக திறன் கொண்ட புதிய இம்பல்ஸ் தற்போது விற்பனை செய்யப்பட்டும் 150சிசி திறன் கொண்ட எஞ்சின் மாடலிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Its been two years since Hero and Honda parted ways and the former created a new global identity for itself with the ‘Hero MotoCorp' name. The challenging part was to develop full fledged R&D programs from scratch, which includes the development of the first indigenously developed engines. Not to mention, new motorcycles that will appeal to a global audience.
Story first published: Thursday, October 24, 2013, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X