சர்வதேச அளவில் வர்த்தக விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஹீரோ

By Saravana
Karizma ZMR
நாட்டின் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் சர்வதேச வர்த்தக விரிவாக்கத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதன்படி, மத்திய அமெரிக்க நாடுகளில் மோட்டார்சைக்கிள் விற்பனையை துவங்கியிருக்கிறது ஹீரோ மோட்டாகார்ப்.

ஹோண்டா விலகிய பின் தனது சர்வதேச வர்த்தக விரிவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது ஹீரோ. வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய அண்டை நாடுகளில் இருசக்கர வாகனங்களை ஹீரோ விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய அமெரிக்க பகுதியிலுள்ள குவான்டமாலா, சால்வேடார் மற்றும் ஹாண்டூராஸ் நாடுகளில் அந்நாட்டை சேர்ந்த இண்டி மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இருசக்கர வாகன விற்பனையை துவங்கியுள்ளது ஹீரோ.

சிஎஃப் டான், ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி, சூப்பர் ஸ்பிளென்டர், கிளாமர் மற்றும் அச்சிவர் ஆகிய மோட்டார்சைக்கிள்களை அங்கு விற்பனைக்கு விட்டுள்ளது. பிரிமியம் ரகத்தில் ஹங்க் மற்றும் கரீஷ்மா பைக்குகளும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹீரோ.

இதைத்தொடர்ந்து, தென் அமெரிக்க, பிற மத்திய அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் தனது தயாரிப்புகளை விற்பனைக்கு விடுவதற்கு ஹீரோ முடிவு செய்துள்ளது. தற்போது அங்கு ஏற்கனவே இருக்கும் கூட்டணி நிறுவனங்களின் டீலர்கள் மூலம் பைக்குகள் விற்பனை செய்யப்படும் என்று ஹீரோ தெரிவித்துள்ளது.

படிப்படியாக டீலர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், மொத்த உற்பத்தியில் சர்வதேச வர்த்தகத்தின் மூலம் 10 சதவீத பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஹீரோ மோட்டாகார்ப் தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #hero motocorp #two wheeler #ஹீரோ
Story first published: Wednesday, May 15, 2013, 15:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X