இத்தாலி நிறுவனத்துடன் கைகோர்த்த ஹீரோ மோட்டோகார்ப்!!

By Saravana

எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தயாரிப்புக்காக இத்தாலியை சேர்ந்த நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

ஹோண்டா கழன்றதையடுத்து, எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக ஹீரோ தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக, உலக அளவில் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து வருகிறது ஹீரோ.

Hero Splendor NXG

ஏற்கனவே 3 நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்த ஹீரோ தற்போது இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரேல்லி என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் ஹீரோவின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், மேக்னெட்டி மரெல்லியின் பங்களிப்பு 40 சதவீதமாகவும் இருக்கும்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்த கூட்டணி நிறுவனத்தில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவும், 200 மில்லியன் டாலருக்கு விற்பனை இலக்காகவும் திட்டமிடப்படப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் உள்ளிட்ட எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை இந்த கூட்டணி உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hero MotoCorp has formed a joint venture with Magneti Marelli from Italy. Magneti is an advanced engineering firm that caters to the automotive industry around the globe and had a turnover of 5.8 billion euros in 2012.
Story first published: Saturday, December 7, 2013, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X