எரிக் புயெல் ரேஸிங் நிறுவன பங்குகளை வாங்கும் ஹீரோ மோட்டோ!

Hero buys stakes in EBR
அமெரிக்காவை சேர்ந்த சூப்பர் பைக் தயாரிப்பாளரான எரிக் புயெல் ரேஸிங் நிறுனவத்தின் பாதியளவு பங்குகளை ஹீரோ மோட்டோ கார்ப் கையகப்படுத்துகிறது.

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா விலகியவுடன் அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோ கார்ப் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்த்தின் மூலம் தொழில்நுட்ப உதவிகளை எரிக் புயெலிடமிருந்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

இத்தோடு நில்லாமல், ஏஎம்ஏ புரொ சூப்பர்பைக் ரேஸில் எரிக் புயெல் அணிக்கு ஹீரோ மோட்டோ கார்ப் ஸ்பான்சரும் வழங்கியது.

இந்த நிலையில், தற்போது எரிக் புயெல் நிறுவனத்தின் பாதியளவு பங்குகளை ஹீரோ மோட்டோ கார்ப் வாங்குகிறது. இதன்மூலம், எரிக் புயெல் நிறுவனத்திடமிருந்து எளிதாக தொழில்நுட்ப உதவிகளை ஹீரோவுக்கு கிடைக்கும்.

எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தின் 25 மில்லியன் டாலர் மதிப்புடைய 49.2 சதவீத பங்குகளை ஹீரோ கையகப்படுத்துகிறது.

"ஏற்கனவே 15 மில்லியன் டாலரை ஹீரோ மோட்டோ கார்ப் எரிக் புயெலிடம் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகை அடுத்த 9 மாதங்களில் எரிக் புயெலிடம் வழங்கப்படும்," என ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

எரிக் புயெல் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்கள் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர்.

அதேவேளை, ஹீரோ கையகப்படுத்தினாலும், எரிக் புயெல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாது. அந்த நிறுவனத்தின் சிஇஓ.,வாக எரிக் புயெல் தொடர்ந்து இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மற்றுமொரு பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஐரோப்பிய பைக் தயாரிப்பளாரான கேடிஎம் நிறுவனத்தில் 47 சதவீத பங்குகளை வாங்கியது. இதேபோன்று, தற்போது இந்தியாவின் ஹீரோ மோட்டோ கார்ப் அமெரிக்காவின் எரிக் புயெலின் பாதியளவு பங்குகளை கையகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Indian two wheeler giant and the world's largest two wheeler manufacturer, in terms of units sold, Hero MotorCorp, will acquire a 49.2 percent stake in its partner Erik Buell Racing from the U.S.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X