புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் எஞ்சின் விபரம் கசிந்தது!!

By Saravana

இந்தியா உள்பட பல்வேறு மார்க்கெட்டுகளில் வர இருக்கும் புதிய சிபிஆர் 300ஆர் பைக்கின் எஞ்சின் விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன.

சீனாவில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது குறித்து நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

Honda CBR 300R

சிபிஆர் 250ஆர் பைக்குக்கு மாற்றாக வர இருக்கும் இந்த புதிய பைக்கின் தோற்ற அடிப்படையிலான மாற்றங்களை தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில், எஞ்சின் விபரங்கள் இன்று வெளியாகியுள்ளன. புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக்கில் 286சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த எஞ்சின் 30.4 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும். தற்போது விற்பனையில் இருக்கும் சிபிஆர் 250ஆர் பைக்கின் எஞ்சின் 26 எச்பி பவரையும், 22.9 என்எம் டார்க்கையும் வழங்கும் நிலையில், கூடுதல் பவரும் புதிய சிபிஆர் 300ஆர் வருகிறது.

அதேவேளை, நேரடி போட்டியாளராக கருதப்படும் கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் ட்வின் சிலிண்டர் எஞ்சின் 39 எச்பி ஆற்றலையும், 27 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

Most Read Articles
English summary
The new Honda CBR300R was revealed during the China International Motorcycle Trade Exhibition (CIMAMotor) in Chongqing, China earlier this week. The new, larger displacement baby Honda has been launched to take on the mighty Kawasaki Ninja 300. But does the Honda have what it takes? Engine specifications of the CBR300R that have surfaced from CIMAMotor shed light on that.
Story first published: Saturday, October 19, 2013, 13:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X