கூடுதல் மைலேஜ் தொழில்நுட்பத்துடன் வந்த ஹோண்டா ட்ரீம் யுகா

எஞ்சின் தொழில்நுட்பத்தில் உலகின் சிறந்த நிறுவனமான ஹோண்டா தற்போது தனது இருசக்கர வாகனங்களில் எச்இடி என்ற புதிய தொழில்நுட்பத்துடன் களமிறக்கி வருகிறது. ஆக்டிவா, டியோ, ஆக்டிவா-ஐ மற்றும் ஏவியேட்டர் உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் இந்த தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த வரிசையில், ட்ரீம் யுகா பைக்கிலும் தற்போது எச்இடி தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ட்ரீம் யுகா கூடுதல் மைலேஜ் தரும் பைக்காக மாறியிருக்கிறது. எச்இடி தொழில்நுட்பம் மற்றும் ஹோண்டா ட்ரீம் யுகாவின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

எச்இடி தொழில்நுட்பம்

எச்இடி தொழில்நுட்பம்

எச்இடி என்ற இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோண்டா எஞ்சின்களில் உராய்வு மிகவும் குறைவு. மேலும், இலகு எடை கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் மைலேஜ் மற்றும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ட்ரீம் யுகாவில் 8.5 பிஎச்பி சக்தியையும், 9 என்எம் டார்க்கையும் அளிக்கும் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

முன்பு ட்ரீம் யுகா லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் பைக்காக இருந்து வந்தது. தற்போது எச்இடி தொழில்நுட்பத்துடன் வருவதால் லிட்டருக்கு 2 கிமீ மைலேஜ் கூடுதலாக சேர்த்து 76 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

விலை

விலை

விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ரூ.45,101 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

கிக் ஸ்டார்டர்-ஸ்போக் வீல், கிக் ஸ்டார்டர்- அலாய் வீல், செல்ஃப் ஸ்டார்டர்-அலாய் வீல் ஆகிய மூன்றுவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. டிஸ்க் பிரேக் இல்லை

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு, மான்சூன் கிரே மெட்டாலிக், ஆல்ஃபா ரெட் மெட்டாலிக், ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக், மேப்பிள் பிரவுன் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

விற்பனை சாதனை

விற்பனை சாதனை

கடந்த ஆண்டு அறிமுகமானதிலிருந்து இதுவரை ஒரு லட்சம் ட்ரீம் யுகா பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

யூனிகார்னிலும்...

யூனிகார்னிலும்...

ட்ரீம் யுகாவை தொடர்ந்து, ஸ்டன்னர், ஷைன், யூனிகார்ன் உள்ளிட்ட பைக் மாடல்களையும் எச்இடி தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் விரைவில் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Honda Dream Yuga commuter bike is now available with the company's fuel saving HET technology. The Dream Yuga HET will deliver an estimated mileage of 74 kmpl, which is 2 kmpl more than before. Price of the bike post HET remains the same as before, at Rs 45,101. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X