ஹயோசங் 125சிசி பைக் உறுதி: சவாலான விலையில் வருகிறது

ஹயோசங் பிராண்டில் புத்தம் புதிய 125சிசி பைக் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக சவாலான விலையில் வர இருக்கும் இந்த புதிய பைக் தற்போதே பைக் பிரியர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

ஹயோசங் பிராண்டிலேயே மிக குறைவான விலை கொண்ட பைக்காக வர இருக்கும் இந்த புதிய பைக் வரவு குறித்து ஹயோசங் கூட்டணி நிறுவனமான டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் தலைவர் சிரிஷ் குல்கர்னி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த புதிய பைக் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய மாடல்

புதிய மாடல்

சர்வதேச மார்க்கெட்டுகளில் ஹயோசங் பிராண்டில் 125சிசி பைக்குகள் விற்பனையில் இருந்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல் புதிய மாடலாக களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

சர்வதேச மார்க்கெட்டுகளில் இருக்கும் ஹயோசங் 125சிசி பைக் மாடல்களில் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல் சிங்கிள் சிலிண்டர் 125சிசி எஞ்சின் கொண்டதாக இருக்கும்.

 உற்பத்தி

உற்பத்தி

தற்போது ஹயோசங் பைக்குகள் மஹாராஷ்டிர மாநிலம், வய் என்ற இடத்திலுள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஆனால், புதிதாக வரும் 125சிசி பைக் புனேயிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள கரத் என்ற இடத்தில் அமைக்கப்படும் புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய ஆலையில் பைக் உற்பத்தி துவங்கும்.

உள்நாட்டு பாகங்கள்

உள்நாட்டு பாகங்கள்

புதிய 125சிசி பைக்கில் பெரும்பாலான முக்கிய பாகங்களை உள்நாட்டு சப்ளையர்களிடமிருந்து பெறுவதற்கு ஹயோசங் - டிஎஸ்கே கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக சவால் தரும் விலையில் புதிய பைக்கை அறிமுகம் செய்ய முடியும் என்று சிரிஷ் குல்கர்னி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

அடுத்த ஆண்டு இறுதியில் இந்த பைக்கின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்படும். 2015ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

கேட்டீங்களா விலையில்...

கேட்டீங்களா விலையில்...

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, ரூ.60,000 விலையில் புதிய பைக்கை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், பைக் விற்பனைக்கு வரும்போது மார்க்கெட்டில் இருக்கும் நிலவரங்களை பொறுத்து விலையில் மாறுதல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #hyosung #two wheeler #ஹயோசங்
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X