2 மாதங்களில் 145 ஹயோசங் அக்குய்லா பைக்குகள் விற்பனை: மண்டைக் காய்ச்சலில் ஹார்லி டேவிட்சன்

கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹயோசங் அக்குய்லா புரொ குரூஸர் பைக் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், 145 அக்குய்லா பைக்குகளை ஹயோசங்களின் அங்கீகாரம் பெற்ற டீலரான டிஎஸ்கே நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பிற நிறுவனங்களின் பிரிமியம் குரூஸர் பைக்குகள் விற்பனையை ஒப்பிடும்போது இது மிக அதிகம். இது பிரமியம் குரூஸர் பைக்குகளை விற்பனை செய்து வரும் ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்களை மண்டைக் காய்ச்சைலை ஏற்படுத்தியிருக்கிறது.

விரைவான டெலிவிரி, சிறந்த சேவை ஆகியவற்றோடு, அக்குய்லா பைக்கின் டிசைன், 650சிசி திறன் கொண்ட பவர்ஃபுல் எஞ்சின், பெர்ஃபார்மென்ஸ் ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுவே, அக்குய்லா பைக்கின் விற்பனை வேகமெடுத்துள்ளதற்கு முக்கிய காரணம் என ஆட்டோமொபைல் துறையினர் கண் சிமிட்டுகின்றனர். ரூ.4.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த அக்குய்லா பெரும் வரவேற்பை பெற்றுள்ளதற்கு ஸ்லைடரில் இருக்கும் அம்சங்களும் காரணமாக இருக்கலாம்.

தோற்றம்

தோற்றம்

குரோம் பினிஷிங் செய்யப்பட்ட கச்சிதமான ஹெட்லைட், எதிர்பார்ப்பதை விட வெளியில் நீண்டிருக்கும் மிக அகலமான ஹேண்டில்பார், இரட்டை குழல்கள் ஒன்றாகிய குரோம் பினிஷிங் கொண்ட புகைபோக்கி, பெட்ரோல் டேங்க் டிசைன் என சிறப்புகள் ஏராளம். 21 எல்இடி விளக்குகளுடன் கூடிய டெயில் லைட் கூடுதல் அழகு சேர்க்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் குரோம் வளையத்துக்குள் மேலே ஸ்பீடோமீட்டரும், கீழே ஓடோமீட்டர், டிரிப் மீட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

74 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 647சிசி வாட்டர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர் பாக்ஸை கொண்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

6 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் வாய்ந்த இந்த பைக் மணிக்கு அதிகபட்சமாக 195 கிமீ வேகம் வரை பறக்கும். முதல் கியரில் வைத்தே 87 கிமீ வேகம் வரை எட்ட முடியும்.

 டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக் முன்புறத்தில் டபுள் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் ஹைட்ராலிங் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளதால் அதிக பாதுகாப்பை வழங்கும்.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஹைட்ராலிக் டபுள் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது. நம்மூர் சாலைகளுக்கும், நீண்ட தூர பயணங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. 240 கிலோ எடை கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்கிறது ஹயோசங்.

Most Read Articles
English summary
The Aquila Pro 650 cc bike from DSK Hyosung is being greatly appreciated by one and all in India as sales figures show that there have been 145+ vehicles sold within the last two months
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X