அட இந்தியாவுக்குத்தான் வந்துகிட்டு இருக்கேன்... உறுதிப்படுத்திய 'இந்தியன்'!

By Saravana

ஜனவரியில் இந்தியன் பிராண்டு மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த பழம்பெரும் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் தற்போது ஏடிவி வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற போலரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது பிரிமியம் மோட்டார்சைக்கிளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதை மனதில் கொண்டு இந்தியன் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய போலரிஸ் முடிவு செய்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்க மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட 3 புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.

வரவேற்பு

வரவேற்பு

அமெரிக்காவில் ஹார்லி டேவிட்சன் விரும்பிகள் கூட தற்போது இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் பக்கம் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். அந்த நம்பிக்கையில் தற்போது இந்தியன் மார்க்கெட்டை விரிவுப்படுத்தி வருகிறது போலரிஸ். போலரிஸ் நிறுவனத்துக்கு ஏற்கனவே இந்திய மார்க்கெட் கொஞ்சம் பிடிபட்டுள்ளதால், இந்தியன் பிராண்டை நம்பி களமிறக்குகிறது.

ஒரே மோட்டார்சைக்கிள்தான்...

ஒரே மோட்டார்சைக்கிள்தான்...

இந்தியன் சீஃப் கிளாசிக், சீஃப் விண்டேஜ் மற்றும் சீஃப்டெயின் ஆகிய 3 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்த மாடல்கள் ஒரே மோட்டார்சைக்கிளை அடிப்படையாகக் கொண்டவை. வசதிகளை பொறுத்து 3 வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வரும் ஜனவரியில் 3 மோட்டார்சைக்கிள் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதை போலரிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்தியன் மோட்டார்சைக்கிளில் புதிய தண்டர் ஸ்ட்ரோக் 111 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 1819சிசி திறன் கொண்ட இந்த எஞ்சின் 161 என்எம் டார்க்கை அளிக்கும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

சீஃப் கிளாசிக்

சீஃப் கிளாசிக்

சீஃப் கிளாசிக் என்ற பேஸ் இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடலில் ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், பிரிமியம் லெதர் இருக்கை, கீ லெஸ் என்ட்ரி வசதிகள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். அமெரிக்காவில் இந்த மோட்டார்சைக்கிள் 18,999 டாலர் விலையில், இந்திய மதிப்பில் ரூ.11.83 லட்சம் விலையில் விற்பனையாகிறது.

சீஃப் விண்டேஜ்

சீஃப் விண்டேஜ்

சீஃப் கிளாசிக் மாடலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களுடன் சாஃப்ட் லெதர் பேக்குகள் கொண்ட மாடல் 20,999 டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.13.08 லட்சத்தில் அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

சீஃப்டெயின்

சீஃப்டெயின்

இந்தியன் மோட்டார்சைக்கிளின் உயர் மாடலான சீஃப்டெயினில் பொருட்கள் வைப்பதற்கு ரிமோட் வசதி கொண்ட பெட்டிகள், புளூடூத் ஆடியோ சிஸ்டம், ஸ்மார்ட்போன் சப்போர்ட் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். அமெரிக்காவில் இந்த மோட்டார்சைக்கிள் 22999 டாலர் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.14.33 லட்சத்தில் விற்பனையாகிறது.

Most Read Articles
English summary
Indian Motorcycles, which revived its product lineup with a brand new engine and three new models earlier this year in the United States earlier, will soon be making it way to India.
Story first published: Tuesday, December 3, 2013, 16:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X