மீண்டும் புதிய நின்ஜா 250ஆர், புதிய பிராண்டுகளை களமிறக்க கவாஸாகி திட்டம்!

By Saravana

குறைந்த விலை நின்ஜா மாடலை அறிமுகம் செய்ய கவாஸாகி திட்டமிட்டுள்ளது. இதற்காக, மீண்டும் தனது நின்ஜா 250ஆர் பைக்கை இந்திய மார்க்கெட்டில் கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுதவிர, புதிய பைக் பிராண்டுகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இறக்குமதி மாடல்கள்

இறக்குமதி மாடல்கள்

கடந்த மாதம் ஸீஎக்ஸ் 10ஆர் மற்றும் ஸீஎக்ஸ் 14ஆர் ஆகிய இரண்டு சூப்பர் பைக் மாடல்களை கவாஸாகி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த இரண்டு பைக்குகளும் இறக்குமதி செய்யப்படுகிறது.

 அசெம்பிளிங் மாடல்கள்

அசெம்பிளிங் மாடல்கள்

நின்ஜா 300 மற்றும் நின்ஜா 650ஆர் ஆகிய பைக்குகளை இந்தியாவில் அசெம்பிள் செய்து கவாஸாகி விற்பனை செய்கிறது. பஜாஜ் புரொபைக்கிங் ஷோரூம்கள் வாயிலாக இந்த பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மீண்டும் நின்ஜா 250ஆர்

மீண்டும் நின்ஜா 250ஆர்

நின்ஜா 300 வருகையால் விடை கொடுத்த நின்ஜா 250ஆர் பைக்கை மீண்டும் இந்தியாவில் குறைந்த விலை மாடலாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கவாஸாகி திட்டமிட்டுள்ளது. ஆனால், சில மாறுதல்களுடன் புதிய நின்ஜா 250ஆர் பைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

குறைந்த விலை

குறைந்த விலை

கவாஸாகியின் குறைந்த விலை மாடலாக இருந்த நின்ஜா 250ஆர் ரூ.2.70 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இதைவிட குறைவான விலையில், புதிய 250சிசி நின்ஜா பைக்கை களமிறக்கவும் கவாஸாகி முடிவு செய்துள்ளது.

புதிய பிராண்டுகள்...

புதிய பிராண்டுகள்...

நின்ஜா தவிர தனது பிற பைக் பிராண்டுகளான வல்கன், கான்கர்ஸ், கேஎல்எக்ஸ் மற்றும் கேஎக்ஸ் ஆகிய 4 பிராண்டுகளில் கவாஸாகி பைக்குகளை விற்பனை செய்கிறது. இதில், வல்கன் குரூஸர் பைக்குகளையும், கான்கர்ஸ் டூரிங் பைக்குளையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கவாஸாகி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உற்பத்தி

உற்பத்தி

இந்தியாவில் மாதத்திற்கு 5,000 பைக்குகளை உற்பத்தி செய்யும் அளவிற்கு கவாஸாகிக்கு பஜாஜ் ஆட்டோ ஆலையில் உற்பத்தி பிரிவு கொடுத்துள்ளது. ஆனால், அதில், மாதத்திற்கு 1,500 பைக்குகள் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, உற்பத்தியை கூட்டும் விதமாக குறைந்த விலை நின்ஜாவையும், இதர புதிய பைக் பிராண்டுகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய கவாஸாகி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
The company is now planning to reintroduce the baby Ninja as an affordable, entry level Ninja, priced lower than its earlier INR 2.70 lakhs figure.
Story first published: Tuesday, September 17, 2013, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X