எஞ்சின் சூடாகும் பிரச்னை: டியூக் 390க்கு பைக்குக்கு கேடிஎம் ரீகால்?

Written by:
Published: Saturday, September 21, 2013, 9:22 [IST]
 

எஞ்சின் அதிக சூடாகும் பிரச்னையை சரிசெய்வதற்காக கேடிஎம் டியூக் 390 பைக் ரகசியமாக திரும்ப பெறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரை சேர்ந்த கேடிஎம் டியூக் 390 பைக் வைத்திருக்கும் டீம் பிஎச்பி வட்டத்தை சேரந்த உரிமையாளர் ஒருவருக்கு இதுகுறித்து டீலரிடமிருந்து தகவல் வந்துள்ளது. சில பாகங்களை மாற்றி தருவதற்காக பைக்கை எடுத்து வருமாறு மேகேரி சர்க்கிள் பகுதியில் இருக்கும் கேடிஎம் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற பாப்புலர் டீலரிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்னை என்ன?

சில போக்குவரத்து நிலவரங்களில் டியூக் 390 பைக்கின் அதிக சூடாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

புதிய பாகங்கள்

எஞ்சின் அதிக சூடாவதாக எழுந்துள்ள பிரச்னையை சரிசெய்யும் வகையில் கூலிங் சிஸ்டத்தில் இருக்கும் ஃபேன் அசெம்பிளியையும், பிரேக்கிங் சிஸ்ட்டத்தின் ரோட்டரையும் இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எவ்வளவு நேரமாகும்?

இந்த பிரச்னையை சரிசெய்து தருவதற்கு 2 முதல் 3 மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது.

எஞ்சின்

கேடிஎம் டியூக் 390 பைக்கில் 43 எச்பி ஆற்றலையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும் 373 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி

புனே அருகில் சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் உற்பத்தியாகும் இந்த பைக் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

English summary

KTM Duke 390 Reportedly Gets Recalled

A Team-BHP member from Bangalore, who was amongst the first in the country to get his hands on the Duke 390, has informed, his bike was recalled by a local dealer. "Got a call from Popular KTM, Mekhri Circle where I picked up the 390. Apparently, they want to replace some parts for 'enhanced performance'".
கருத்தை எழுதுங்கள்

Latest Photos

Latest Videos

Free Newsletter

Sign up for daily auto updates

New Launches